சுமார் ரூ.2000 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திரைப்பட தயாரிப்பாளரும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் தடுக்க முன்னதாக அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு , மத்திய போதை பொருள் தடுப்பு காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் நிலையில் தற்போது ஜாபர் சாதிக் கைது செய்யப்படுள்ளதாக மத்திய போதை பொருள் தடுப்பு காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர் .
டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

2000 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு காவல்துறை தேடி வந்தது. இதன் மூலம் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் அம்பலப்படுத்தியது.
இது தொடர்பாக என்சிபி துணை இயக்குநர் ஜெனரல் (டி.டி.ஜி) ஞானேஷ்வர் சிங் கூறுகையில், கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 45 சூடோபீட்ரின் ஏற்றுமதிகளை அனுப்பியதாக போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்திற்கு தகவல் அளித்ததாக தெரிவித்தார். இந்த ஏற்றுமதிகள் சுமார் 3,500 கிலோ சூடோபிட்ரின் ஆகும், இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ .2,000 கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் என்சிபி மற்றும் டெல்லி போலீஸ் குழுக்கள் நெட்வொர்க்கை கண்டுபிடித்துள்ளதாக ஞானேஷ்வர் சிங் கூறி இருந்தார்.
மேலும் இந்த போதை பொருள் கடத்தல் கூட்டணியின் சூத்திரதாரி ஒரு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் தலைமறைவாக உள்ளார். சூடோபீட்ரின் மூலத்தை கண்டறிய அவரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று ஞானேஸ்வர் சிங் கூறி இருந்தார்.
இதனை அடுத்து திமுகவின் அயலக அணியின் நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் அப்பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
ஜாபர் சாதிக் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என சென்னை மயிலாப்பூரில் உள்ள அருளானந்தம் தெருவில் உள்ள அவரது வீட்டில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று ஜாபர் சாதிக் ஆஜர் ஆக வேண்டிய நிலையில், இதுவரை ஆஜராகமல் தலைமறைவாக இந்து வந்தார். இந்நிலையில் தற்போது ஜாபர் சாதிக்கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் உடன் தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில், இது தொடர்பாக அவர் அளித்திருந்த விளக்கத்தில், தாம் சென்னை மாநகர காவல் அணையராக இருந்தபோது 10 சிசிடிவி கேமிராக்களை ஜாபர் சாதிக் ஸ்பான்சர் செய்தார். போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் குற்றவாளி என்று தெரிந்தது, சிசிடிவி கேமராக்களை நிறுத்தி விட்டோம். ஜாபர் சாதிக்கிற்கு தாம் கொடுத்தது விருது அல்ல என்றும், அது வெறும் பரிசுப்பொருள்தான் என்றும் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்
மேலும் ஜாபர் சாதிக்கின் கைது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு இன்று பிற்பகல் விளக்கமளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.