கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது,ஒருவர்தலைமறைவு,12 கிலோ கஞ்சா பறிமுதல்.

1 Min Read
வட மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது

தமிழகத்தில் தொடர்ந்து பல இடங்களில் கஞ்சா விற்பணை சட்டவிரோதமாக நடந்து வருகிறது.அந்த வகையில் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க உதவி காவல் கண்காணிப்பாளர் பிருந்தா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சிறப்பு வாகன தணிக்கை மட்டும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில் நேற்று காலை மரப்பேட்டை வீதியில்  சிறப்பு தனி படைப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தில் கஞ்சா பொட்டலம் இருப்பது தெரிய வந்தது,இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் வட மாநில தொழிலாளர்கள் கஞ்சாவை கடத்தி வந்து பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

இதை அடுத்து சிறப்பு தனி படை போலீசார் நடத்திய சோதனையில் வட மாநிலத்தைச் சேர்ந்த சருண் , சிந்து பாத்தான் , முகமது முஸ்தபா , முஹேஜா , ஆகியோரை சிறப்பு தனி படைப்பு போலீசார் கைது செய்தனர்.சுல்தான் பேட்டைச் சேர்ந்த சராஜ் (30) என்பவர் தலைமறைவாகி விட்டார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர், பொள்ளாச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

Share This Article

Leave a Reply