பனையபுரம் மதுவிலக்கு சோதனை சாவடியில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்திற்கு கடத்திவரப்பட்ட 7 கிலோ சந்தனக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள பனையபுரம் மதுவிலக்கு சோதனை சாவடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த சுப்பிரமணி என்பவரை மறித்து போலீசார் சோதனை செய்ததில் இரு சக்கர வாகனத்தில் மறைத்து சந்தன கட்டைகள் கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து மதுவிலக்கு போலீசார் இருசக்கர வாகனம் மற்றும் கடத்திவரப்பட்ட 7 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட
சுப்பிரமணி என்பவரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளை போலீசார் விழுப்புரம் வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.