கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைத்த வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதியின் மனைவியிடம் கோவை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சபீர் கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நாசர் மதானி என்பவர் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து 2002 ம் ஆண்டு கோவை பிரஸ் கிளப்பில் சபீர் டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வைத்தார். ஆனால் அது வெடிக்கவில்லை. வெடிக்காத அந்த குண்டை காவல் துறையினர் கைப்பற்றினர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) மற்றும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். 21 ஆண்டுகள் ஆகியும் சபீர் யார் கையிலும் சிக்காமல் இருந்து வருகிறார்.
அவரது மனைவி கேரள மாநிலம் வயநாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சபீர் மீதான வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ தீவிர படுத்தியது. அவரது புகைப்படத்தை வைத்து டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்பொழுது அவர் தனது மனைவியுடன் சென்று வந்தது பதிவாகி இருந்தது. இதனால் லஷ்கர் – இ – தொய்பா அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த விவரங்கள் அவரது மனைவிக்கு தெரிந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. ரபீரின் மனைவியிடம் விசாரணை நடத்த கோவை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு என்.ஐ.ஏ அறிவித்து உள்ளது. இதை அடுத்து சபீரின் மனைவியிடம் கோவை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.