திராவிடர் கழகம் தலைவர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய மிக மிக அவசியமானது.

3 Min Read
  • திராவிடர் கழகம் தலைவர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய மிக மிக அவசியமானது ஒன்று இளைஞர் சமுதாயத்தைச் சேர்ந்த நீங்கள் அதை முழுமையாக தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய தூதுவராக இருக்க வேண்டும்.

- Advertisement -
Ad imageAd image

தஞ்சையில் கலைஞர் 100 வினாடி வினா போட்டியில் திமுக எம்பி கனிமொழி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கொய்யாமொழி கலந்துகொண்டனர் பின்னர் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

முத்தமிழ் கலைஞரின் பங்கு எவ்வாறு உள்ளது திராவிட இயக்கம் என்றால் என்ன அதன் வரலாறு இதெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை அதெல்லாம் தெரிந்து கொள்வதற்காக இந்த நிகழ்வை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

துணைப் பொதுச் செயலாளர்களிடம் கேட்டேன் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் போட்டிக்கு வந்துள்ள ஒரு நபர் மட்டுமே உள்ளனர் என கேட்டதற்கு துணைப் பொதுச் செயலாளர் சொன்ன பதில் அந்த திருவாரூர் மாவட்டம் ஒருவர் பின்னாடி தான் ஒட்டு மொத்த தமிழகமே நிற்கிறது என்று சொன்னார்கள் உண்மை தானே அவர்கள் சொன்னது திருவாரூர் மாவட்டத்தை பார்த்து தான் எல்லோரும் அணிவகுத்து வந்து கொண்டிருக்கிறோம்.

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன் திராவிட முன்னேற்றக் கழகம் ஏறத்தாழ 75 ஆண்டுகள் இருக்கின்ற ஒரு இயக்கம் பல வெற்றிகளை பார்த்திருக்கிறோம் பல தோல்விகளை பார்த்திருக்கிறோம் நாங்கள் 75 ஆண்டுகள் முத்தமிழ் கலைஞர் பேரறிஞர் அண்ணா தந்தை பெரியார் இவர்கள் எல்லாம் ஒரு விழிப்புணர்வை நமக்கு கொடுத்து விட்டார்கள் விழிப்புணர்வு தான் கொடுத்து விட்டார்களே ஏன் இந்த இயக்கம் தேவைதானா நான் ஏன் உங்களுக்கு வாக்களிக்கணுமா ஏன் என நினைக்கக்கூடிய இளைஞர் சமுதாயத்திற்கு இன்றைக்கும் இந்த இயக்கம் ஏன் தேவை என்பதை தமிழக முதல்வர் ஒவ்வொரு காலகட்டத்திலும் சொல்லிக் கொண்டு வருகிறார் நமக்கே தெரியாமல் சில இடையூறுகள் வந்து கொண்டே தான் இருக்கும் காலம் காலமாக நம்மளை தலையெடுதக்க விடாமல் பார்த்துக் கொள்வதற்கு ஒரு கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும் அந்த கூட்டத்திற்கு நான் யார் தெரியுமா திராவிடம் என்னன்னு தெரியுமா என்று சொல்லக்கூடிய அளவிற்கு நான் அறிவேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நாம் அறிவை பெற வேண்டும் ஒரு அறிவு சார்ந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக முத்தமிழ் கலைஞர் பல்வேறு திட்டங்களை சீர் அமைப்புகளை நமது சமுதாயத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா ஒரு கதையில் கூறினார் இருவர் ரயில் பயணத்தில் சென்றபோது ஒரு கோயிலை பார்த்தும் அந்த மலையை பற்றி நீண்ட நேரம் பேசி வந்தனர் ஆனால் கடைசி வரைக்கும் இந்த ரயிலை கண்டுபிடித்தவர் யார் அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர் என தெரியாமல் அதில் பயணம் செய்து கொண்டு மற்ற விஷயங்களை பேசி வந்தனர் வேண்டாத விஷயங்களை பேசாமல் அறிவியல் சார்ந்து பேச வேண்டும் என பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார் உண்மைதான் அண்ணா சொன்னது போல தமிழகத்தில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு லண்டனுக்கு சென்றவனிடம் பாண்டியன் பற்றி தெரியுமா என்ற கேள்விக்கு தெரியாது என்று சொன்னார் என்று சொன்னால் அது நமக்கே அழகு அல்ல என்று அவர் சொன்னார்.

தமிழ்நாடு என்றால் என்ன நமது வரலாறு என்ன நமக்காக உழைத்த திராவிடர் கழகம் தலைவர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய மிக மிக அவசியமானது ஒன்று இளைஞர் சமுதாயத்தைச் சேர்ந்த நீங்கள் அதை முழுமையாக தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய தூதுவராக இருக்க வேண்டும் இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நமது நாடாளுமன்ற உறுப்பினர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் முயற்சி என்பது கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய அளவிற்கு நமது நடுவராக இருக்கக்கூடிய ரவிச்சந்திரன் செல்வது போல 2 லட்சம் இளைஞர்கள் பங்கு பெற ஆசைப்பட்ட உள்ளீர்கள் என்பதை மிகப் பெரிய வெற்றியை ஏற்கனவே நமது நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற்று விட்டார் என உரையாற்றினார்.

Share This Article

Leave a Reply