திருவண்ணாமலை அருகே விபத்தில் படுகாயம் அடைந்த காவியா என்ற பெண்ணை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தனர்-உறவினர்களை வைத்து இறந்த உடல்களை அடையாளம் காணும் பணிகளில் காவல்துறையினர் தீவிரம்.

விபத்து:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பக்கிரிபாளையம் பைபாஸ் சாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூருக்கு செல்லும் போது எதிரே வந்த லாரி மீது மோதி காரில் பயணம் செய்த ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.பொது மக்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமணைக்கு அனுப்பப்பட்டது.
கர்நாடகாவில் இருந்து சதீஷ் அவரது மனைவி காவியா மற்றும் அவரது குழந்தைகள் சர்வேஷ் மற்றும் சித்தாத், இவர்களுடன் காவியாவின் தம்பிகள் மணிகண்டன் மற்றும் ஹேமந்த், காவியாவின் அம்மா மலர் அவரது கணவர் சின்னப்பா ஆகிய எட்டு நபர்கள் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று காலையில் தனது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.அப்போது தான் இந்த விபத்து நேர்ந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பக்கிரிபாளையம் புறவழிச்சாலையில் எதிரே வந்த லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த காவியாவை தவிர மற்ற அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயம்;
படுகாயம் அடைந்த காவியாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. விபத்து நடைபெற்ற இடத்தை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.காவியாவுக்கு ஆறுதல் கூறினர்.உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்க்கு முதல்வர் ஆஅருதல் கூறியதுடன் ரூ 2 லட்சம் நிவாரனம் அறிவித்தார்.
சிகிச்சை:
பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் காவியாவை மாவட்ட ஆட்சியர், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தனர்.மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டனர்.
தற்போது மருத்துவமனைக்கு வந்த இறந்தவர்களின் உறவினர்களை வைத்து இறந்து போனவர்களை அடையாளம் காணும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.மேலும் அவர்களின் உடல் உடல்கூறாய்வுக்கு உத்தரவிட்டனர்.விபத்திற்கான காரணம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.