திருவாரூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி பாராமெடிக்கலில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவன் வாகனவிபத்தில் உயிரிழந்த பரிதாப சம்பவம்.அப்பகுதியில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவாரூரில் மருத்துவக்கல்லூரியில் பாராமெடிக்கல் படிக்கும் மாணவன் நேற்று வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடிரென்று விபத்து ஏற்பட்டது.அவ்விடத்தில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாராமெடிக்கல் மற்றும் அதனை சார்ந்த பட்டப்படிப்புகளும் உள்ள கல்லூரி நடைபெற்றுவருகிறது. இந்த கல்லூரியில் தர்மபுரி மாவட்ட பெண்ணாகரம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி என்பவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகன் அனாரியன் வயது 21. இவர் இந்த கல்லூரியில் பிஎஸ்சி விபத்து மற்றும் அவசரப்பிரிவு பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இங்கு மாணவர்விடுதியில் தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தனது இரு சக்கர வாகனத்தில் திருவாரூர் சென்று விட்டு மாணவர் விடுதிக்கு திரும்பி வர கொண்டிருந்த பொழுது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உள்ள ஒரு வளைவில் திரும்பும்போது திருவாரூர் மற்றும் மருத்துவக் கல்லூரி செல்லும் போது அரசுபேருந்தில் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்து மயங்கி கீழே விழுந்தார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் அவ்விடத்தில் இருந்து அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவக்கல்லூரி மருத்துவனை உடனடியாக கொண்டு சென்றனர். பின்பு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்த நிலையில் போது சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 11 மணிக்கு அனாரியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த திருவாரூர் தாலுகா காவல்நிலைய போலீசார் அவர்கள் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்பு தகவல் அறிந்து வந்த மாணவனின் தாய் தந்தையர் இருவரும் இன்று காலை 12 மணி அளவில் திருவாரூருக்கு வந்த தாய் தந்தையர் மகனின் உடலை பார்த்து கதறி கதறி அழுது பரிதாப குரியதாக இருந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.