பேருந்தில் பயணம் செய்த வழக்கறிஞர் உயிரை விட்ட பரிதாபம்..!

2 Min Read
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரவி ஆனந்த்

சென்னை அருகே வி ஜி பி செல்வா நகர் என்ற வேளச்சேரியைச் சேர்ந்தவர்.இவர் பெயர் ரவி ஆனந்த், வயது 45. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி இருந்து வருகிறார்.இவர் நேற்று முன்தினம் மதுரையில் இருந்து தனது உறவினர் வீட்டிற்கு செல்லலாம் என்று நினைத்தார்.பின்பு பேருந்தில் சென்று பயணம் செய்து மதுரைக்கு சென்றார்.நேற்று இரவு மதுரையில் இருந்து திரும்பி சென்னைக்கு வர ஒரு அரசு பேருந்தில் பயணம் செய்து வந்து கொண்டிருந்தார்.

- Advertisement -
Ad imageAd image

அப்புறம் அரசு பேருந்தில் ஒட்டுநராக செயல்பட்டவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாரதிதாசன் என்பவரும், ராமநாதபுரம் எஸ் வி மங்கலத்தை சேர்ந்த நடத்துனராக சந்திரமோகன் என்பவரும் இருந்தனர். அரசு பேருந்தில் இன்று அதிகாலை 5.45 மணிக்கு மேல் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு ஓட்டலில் பேருந்து நின்றது.பின்பு பேருந்தில் பயணம் செய்த அனைவரும் இறங்கி சென்றனர்.

பயணித்த பேருந்து

அப்புறம் ரவிஆனந்த் பேருந்தில் இருந்து இறங்கி கழிவறைக்கு சென்று விட்டு, திரும்பி வந்து பேருந்தில் ஏறி தனது இருக்கையில் அமர்ந்தார். பின்பு அதிகாலை 5. 55 மணிக்கு மேல் அரசு பேருந்தில் பயணம் செய்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நெஞ்சுவலி அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

ரவிஆனந்த் அருகில் உள்ள பயணித்தவர்களிடம் நெஞ்சு வலி ஏற்ப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.அடுத்த ஒரு சில நிமிடங்கள் கழித்து பேருந்தில் இருக்கையிலேயே இறந்தார்.பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் நடத்துனர் ஆகியோர் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

பயணித்த பேருந்து

பின்பு ஆம்புலன்ஸ் வந்த உடன் அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக அப்பயணிகளிடம் தெரிவித்தனர். அப்புறம் உடனடியாக விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்பு விரைந்து வந்து விக்கிரவாண்டி போலீசார் செல்வகுமார் என்பவர் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த ரவி ஆனந்த் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேர்க்கப்பட்டார். பின்பு பிணவரையில் வைக்கப்பட்டது.

பின்பு உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்தவரின் மனைவி வினித்ரா சென்னை தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்தில் பயணம் செய்த வழக்கறிஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் புகார் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்தார்.அரசு பேருந்தில் இருக்கையிலே நெஞ்சு வலியால் பரிதாபமாக உயிரிழந்த வழக்கறிஞர் ரவி ஆனந்த்.

Share This Article

Leave a Reply