பழங்குடியின பெண் ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா தனது சமூகவலைத்தள பக்கத்தில், “திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்ரீபதி தனது 23 வயதிலேயே பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்ணினத்திற்கே பெருமை சேர்த்துள்ள ஸ்ரீபதி , பல சவால்களை எதிர்கொண்டு, தனது விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் இத்தகைய ஒரு சாதனையை படைத்துள்ளதை எண்ணி மிகவும் பெருமிதம் அடைகிறேன்.
நம் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக விளங்கும் ஸ்ரீபதி அவர்கள் அவரது வாழ்வில் எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று, அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.