- தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள குந்தவை நீச்சல் குளத்தை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சத்து 65 ஆயிரம் ஒதுக்கினார்.
அதனை தொடர்ந்து நீச்சல் குளம் சீரமைக்கப்பட்டது. நீச்சல் குளத்தில் காத்திருப்போர் கூடம் மற்றும் சுற்றி நடைபாதை அமைக்கப்பட்டன.
இன்று புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு டி.கே.ஜி. நீலமேகம் எம்எல்ஏ தலைமை தாங்கினார் .
இதனை அரசு தலைமை கொறடா கோவி. செழியன், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.