- பொதுவாக உலக அளவில் வலிமையான உளவாளிகளை கொண்ட நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. இஸ்ரேலின் மொசாத் அமைப்பு.. உலகிலேயே டாப் உளவாளிகளை கொண்ட அமைப்பு ஆகும். பொதுவாக இஸ்ரேல் எந்த போரிலும் நேரடியாக தாக்குவதை விட.. உளவாளிகள் மூலம் மறைமுகமாக தாக்குவது, உளவாளிகள் மூலம் எதிரி அமைப்புகளை சிதைப்பது போன்ற வலிமையான திட்டமிடலை கொண்டது.
இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்ரேலின் பிளான் தொடர்பாக இரண்டு அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் கசிந்துள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஆவணங்கள்.. அமெரிக்கா முழுக்க டெலிகிராமில் கசிந்து உள்ளன. ஈரானுக்கு ஆதரவான டெலிகிராம் பக்கங்கள் இதை கசியவிட்டுள்ளன.
நேஷனல் ஜியோஸ்பேஷியல்-இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி (NGA) க்கு சொந்தமான இந்த ஆவணங்கள் கசிந்து உள்ளன. அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களால் சேகரிக்கப்பட்ட படங்கள் மூலம் இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இஸ்ரேல் மேற்கொள்ளும் ராணுவப் பயிற்சிகள் மற்றும் அவர்கள் ராணுவத்தின் தயார்நிலை பற்றிய பல்வேறு தகவல்கள் இந்த உளவு செயற்கைக்கோள்களால் சேகரிக்கப்பட்ட படங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த படங்கள்தான் லீக்காகி உள்ளன. அமெரிக்கா அதிர்ச்சி: அமெரிக்க அதிபர் பிடன் இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளாராம். அமெரிக்க அரசாங்க ஆவணங்கள் வெளிப்படையாக கசிந்தது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் “ஆழ்ந்த கவலையில்” இருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கையாக வெளியிட்டு உள்ளது. கடந்த வாரம் சமூக ஊடக தளமான டெலிகிராமில் லீக்கான ஆவணங்கள் எப்படி வெளியாகின என்பது வெள்ளை மாளிகைக்கே தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
லீக்கான ஆவணங்கள்:
6. இது ஈரான் மீதான பதிலடித் தாக்குதலுக்கான இஸ்ரேலின் பிளானிங் போல தோன்றுகிறது. ஈரான் மீது இஸ்ரேல் மிக பயங்கரமான தாக்குதல் நடத்த போவதாக இந்த ஆவணங்கள் மீது உறுதியாகி உள்ளன. இவை எல்லாம் லீக்கான காரணத்தால் இஸ்ரேல் இந்த தாக்குதலை தொடருமா என்பது கேள்வி.

Leave a Reply
You must be logged in to post a comment.