இஸ்ரேல் களமிறக்கிய புது சக்தி! எல்லையில் நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் “THAAD” அமைப்பு! ஈரானுக்கு செக்.!

3 Min Read
  • இஸ்ரேல் ராணுவத்தில் THAAD அமைப்பு வெற்றிகரமாக இணைக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல் எல்லையில் இந்த THAAD அமைப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் மேலும் இதே போன்ற THAAD அமைப்பு அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்கா சார்பாக இஸ்ரேலுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்பான THAAD அமைப்பை வழங்கி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பென்டகன் வெளியிட்டு உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

பென்டகன் தலைவர் லாயிட் ஆஸ்டின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இஸ்ரேல் நாட்டின் வான் பாதுகாப்பை அதிகரிக்க உதவும் டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் (THAAD) அந்த நாட்டிற்கு அனுப்பிவிட்டு உள்ளது. THAADயை இயக்கம் மின்கலம் உள்ளிட்ட உபகரணங்கள் அதனுடன் தொடர்புடைய அமெரிக்க ராணுவ வீரர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க பாதுகாப்புத் துறை அளித்துள்ளது.
THAAD ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு இஸ்ரேலின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை அதிகரிக்கும். இந்த நடவடிக்கை, இஸ்ரேலைப் பாதுகாப்பதற்கும், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்களை ஈரானின் எதிர்கால பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கும் THAAD உதவும் என்று பென்டகன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் THAAD அமைப்பு இஸ்ரேலுக்கு எப்போது செல்லும்.. எப்போது களத்தில் பயன்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. THAAD அமைப்புடன் சுமார் 100 படை வீரர்கள் அதை இயக்குவதற்காக அமெரிக்காவிலிருந்து இஸ்ரேல் நாட்டிற்குச் செல்வார்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஈரானின் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி அமெரிக்காவின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சனம் செய்தார். அமெரிக்க ஏவுகணை அமைப்புகளை இஸ்ரேலில் இயக்குவதன் மூலம் ஈரானுக்கும், இந்த பிராந்தியத்திற்கும் பாதுகாப்பு ரீதியான குறைபாடுகள், சிக்கல்கள் ஏற்படும். போர் உச்சம்; இஸ்ரேல் – ஈரான் இடையே நடக்கும் மோதலில் அடுத்த 1 வாரம் மிக முக்கியமான வாரமாக மாறி உள்ளது. இரண்டு தரப்பு மோதலில் அடுத்த 1 வாரம் பல்வேறு சுவாரசியமான, அதிர்ச்சி அளிக்கும் மாற்றங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன.
சமீபத்தில் நடந்த ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால் இந்த போர் விவகாரமான நிலைமையை எட்டும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த வாரம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் உள்ளன.

கொஞ்சம் இதையும் படிங்க :  http://thenewscollect.com/bullet-in-the-head-what-sinwar-did-at-the-last-second-shock-in-the-autopsy-results/ 

ஈரான் நடத்திய வான்வெளி தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளது இஸ்ரேல். தங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தால் மோசமான வலுவான தாக்குதலை கொடுப்போம் என்று ஈரான் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் அதற்கு அஞ்சாமல் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே ஈரான் – லெபனான் – இஸ்ரேல் போர் உச்சம் அடைந்து உள்ளது. இது கண்டிப்பாக உலகபோராக மாறும் அபாயம் உள்ளது. முக்கியமாக இந்த போர் நடக்கும் பட்சத்தில் அது அணு ஆயுத போராக நடக்கும் அபாயமும் உள்ளது.

முக்கியமாக ஈரானின் பாலைவனத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கடுமையான விவாதங்கள் ஏற்பட்டு உள்ளது. ஈரான் அணுகுண்டு சோதனை செய்துள்ளதோ என்ற ஊகங்களை இந்த நிலநடுக்கம் தூண்டி உள்ளது. ஈரான் அடிக்கடி பூகம்பத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடு, ஆனால் அக்டோபர் 5 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் இயல்பான நிலநடுக்கம் கிடையாது.. அது இயற்கையான நிலநடுக்கம் கிடையாது என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

 

Share This Article

Leave a Reply