மழை வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களை சந்திப்பதை விட முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு இந்திய கூட்டணி கூட்டம் முக்கியமானதா? என பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
விருதுநகரில் மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் தென் மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் வர தொடங்கும். சென்னிமலையில் இருந்து உடைகள் அனுப்பி வைக்கப்படும். நானும் 3 நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை சந்திக்க உள்ளேன்.

மழையில் பாதித்த பகுதிகளில் பாதிப்படைந்த மக்களை சந்திக்காமல் டெல்லியில் இந்திய கூட்டணி கூட்டத்திற்கு டெல்லிக்கு பயணம் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்றது ஏன்? மக்களை விட கூட்டணிக்கான கூட்டம் முக்கியமானதா? தேர்தல் நாளைய நடக்கப்போகிறது. ஒரு வாரம் கழித்து கூட்டத்தை நடத்தலாம். டெல்லியில் இருந்து கொண்டு அடுத்த இரண்டு நாட்களில் தான் தூத்துக்குடி செல்ல உள்ளேன் என்று தெரிவித்தார். இது ஏற்புடையதல்ல, மூத்த அமைச்சர்களை அனுப்பாமல் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை அனுப்பி உள்ளார். அவருக்கு பேரிடர் மேலாண்மையில் என்ன அனுபவம் இருக்கும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்துள்ளது.

ஹெலிகாப்டர்கள் கடலோர பாதுகாப்பு படை பேரிடர் மீட்பு படையினர் போன்ற பல உதவிகளை கூறலாம். நெல்லை மேயர் கூட சென்னையில் தான் உள்ளார். மூத்த தலைவர்களும் டெல்லியில் உள்ளனர். பாரதிய ஜனதாவுக்கு அழிவு காலம் வந்து விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகிறார். இவர்கள் சொல்ல சொல்ல தான் பாரதிய ஜனதா இன்னும் வேகமாக வளரும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் ஒரு இடங்களை பாரதிய ஜனதா பிடிக்க வாய்ப்புள்ளது நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி நோட்டாவுடன் தான் போட்டி போட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.