- திமுகவில் உதயநிதியை தவிர வேறு எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கும் அமைச்சருக்கும் துணை முதல்வராகவும் தகுதி இல்லையா குடும்பத்திற்குள்ளேயே ஆட்சியை பகிர்ந்து கொள்கிறார்கள் இதிலிருந்து அண்ணாவின் கொள்கை நீர்த்துப் போய்விட்டதற்கு என்பதற்கு இதுவே உதாரணம் தஞ்சையில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் பேட்டி.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 116 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக செய்தி தொடர்பாளர் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் செய்தியாளரிடம் பேசுகையில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை பார்க்கும் போது தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி அப்போதே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன அதன் காரணமாக தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் படகுகள் சேதப்படுத்துவதுமாக இருந்து வருகிறது கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மத்திய அரசும் தமிழக அரசும் மீட்டு தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஏற்கனவே அண்ணா திமுக ஆதரவு தெரிவித்திருந்தோம் ஆனால் தற்போது அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது மூன்று நாட்களுக்கு முன்பு தான் ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவடைந்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் உடன் சட்டமன்றத் தேர்தலை வைத்திருந்தால் பொதுப்படையாக இருந்திருக்கும் இதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது எந்த முறையிலே நடத்தப் போகிறார்கள் என்பதை பொருத்து அடுத்து அண்ணா திமுக தனது கருத்தை சொல்லும். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பிப்ரவரியில் அதிமுக ஒன்றிணையும் எனக் கூறியதற்கு அண்ணா திமுக பலம் பொருந்திய கட்சியாக தான் இருக்கிறது இணைவது குறித்து பொதுச்செயலாளர் பதில் சொல்வார் என தெரிவித்தார். திமுகவைப் பொறுத்தவரை குடும்பத்திற்குள் ஆட்சி பகிர்ந்து அளிக்கப்படுகிறது. துணை முதல்வராகும் தகுதி திமுகவில் வேறு எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கோ அமைச்சருக்கோ இல்லையா தாத்தா அப்பா பேரன் என இவர்களுக்குள்ளேயே ஆட்சியை பகிர்ந்து கொள்கிறார்கள் இதுதான் அண்ணாவின் கொள்கையா அண்ணாவின் கொள்கை நீர்த்துப் போய் இருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். நடிகர் விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் வரட்டும் அவருடைய கருத்துக்களை சொல்லட்டும் நாங்கள் சொல்கிறோம் என தெரிவித்தார்.



Leave a Reply
You must be logged in to post a comment.