ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் பெரியாருக்கு எதிராக பேசுவதா என்று அண்ணாமலை மீது, கே.எஸ் அழகிரி மறைமுகமாக தாக்கி பேசினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 106 ஆவது பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்ட இந்திரா காந்தி உருவப்படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார். விஜய் வசந்த் எம்.பி உள்பட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் பி.எஸ் புத்தன் தலைமையில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா கருத்தரங்கு நடந்தது.

அதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மாநிலத் துணைத் தலைவர் ஆ.கோபண்ணா, பொதுச் செயலாளர்கள் பி.வி தமிழ்ச்செல்வன் தளபதி பாஸ்கர், செயலாளர் அகரம் கோபி, கலை பிரிவு தலைவர் கே. சந்திரசேகரன் செயலாளர் சூளை ராஜேந்திரன் ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் கே.எஸ் அழகிரி பேசியதாவது; மது ஒழிப்பை பற்றி பேசும் முழு தகுதியும் காங்கிரசுக்கு மட்டும் உண்டு. கள்ளுக்கு தடை விதித்த போது, தனக்கு சொந்தமான அனைத்து தென்னை மரங்களையும் வெட்டி சாய்த்தவர் பெரியார்.
ஆனால் சிலர் அண்ணாமலை என்பவர், பெரியாருக்கு எதிராக பேசி வருகிறார்கள். பெரியார் சிலைகளை பெரியார் கல்வெட்டுகளை அகற்றுவோம், அப்புறப்படுத்துவோம் என்று பேசி வருகிறார்கள். அதிகாரத்தில் கட்சி இருப்பதால் பாதுகாப்பாக பேசுகிறார். அவரைப் போல கோழை அல்ல பெரியார். பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல அவர் அண்ணாமலை பேசலாம். அவர்கள் மரபு பாரதிய ஜனதா தியாக மரபு அல்ல. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வகையில் நிறைய தெரு முனை பிரச்சனைகளை நாம் நடத்த வேண்டும் எவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக காங்கிரஸ் எஸ்.சி பிரிவு தலைவர் எம்.பி ரஞ்சன்குமார் ஏற்பாட்டில் ஏழை எளியோர்க்கு பல்வேறு நல உதவிகளை கே.எஸ் அழகிரி வழங்கினார். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் காங்கிரசில் இணைந்தனர். இந்திர காந்தி பிறந்த நாளை ஒட்டி காங்கிரஸ் கட்சியினருக்கு கே.எஸ் அழகிரி இனிப்புகள் வழங்கினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.