- இஸ்ரேலுக்கு எதிராக நவீன ராட்சச ஆயுதங்கள், பயங்கர கருவிகளை களமிறக்க போகிறோம் என்று ஈரான் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் தெரிவித்து உள்ளதாம்.
புதிய நவீன ஆயுதங்களை இடம்மாற்றி வருகிறோம். எங்களுடைய தாக்குதல் இந்த முறை பயங்கரமாக இருக்கும். நவீன ராட்சச கருவிகள் தாக்குதலுக்கு தேவையான இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படும். இந்த முறை எங்களுடைய தாக்குதல் புதிய திட்டத்தோடும், புதிய அணுகுமுறையோடும் இருக்கும் என்று இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் தெரிவித்து உள்ளதாம்.
இது தொடர்பாக ஈரான் அரசு சார்பாக இஸ்லாமிய நாடுகளுக்கு ராஜாங்க ரீதியாக மெசேஜ் அனுப்பப்பட்டு உள்ளதாம். ஈரான் தாக்குதல்: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில்.. இஸ்ரேல் மீது ஈரான் இரண்டாம் கட்ட தாக்குதலை நடத்த உள்ளதாம். இத்தனை நாட்கள் ஈரான் அமைதியாக இருந்தது.. ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளை வைத்து proxy war.. அதாவது நேரடியாக போர் நடத்தாமல் மறைமுகமாக இஸ்ரேலை தாக்கி வந்தது. இதற்கு இடையில்தான் கடந்த மாதம் தொடக்கத்தில்.. மிகப்பெரிய அளவில் இஸ்ரேலை நேரடியாக ஈரான் தாக்கியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்.. ஈரானின் ரேடார் சிஸ்டங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஈரான் உள்ளே வரக்கூடிய போர் விமானங்களை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்கிறார்கள்.அதோடு இல்லாமல்.. ஈரான் தங்களின் சொந்த போர் விமானங்களை ரேடார் மூலம் வழிகாட்ட முடியாத நிலை ஏற்படலாம் என்கிறார்கள். சமீபத்தில்தான் ஈரான் மீது இஸ்ரேலின் மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது.
மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதலை தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
ராணுவ ஆயுதங்கள்: ஈரான் நாட்டு அரசு தனது ராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டு உள்ளதாம். போர் தொடர்பாக முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாம். கடந்த தாக்குதலில் “Fattah 1 மற்றும் 2” ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தியது. முதல்முறையாக இந்த இரண்டு ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி உள்ளது.
இதை மீண்டும் பயன்படுத்தும் வகையில்.. அந்த ஏவுகணைகளை ஈரானின் எல்லை பகுதிகளுக்குள் ஈரான் மாற்றி உள்ளதாம். ஃபத்தாஹ் 1 என்பது ஈரானின் ஹைப்பர்சோனிக் நடுத்தர தூர ஏவுகணைகளில் ஒன்றாகும். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் உருவாக்கப்பட்டு 2023 இல் அந்த ராணுவத்தில் இணைக்கப்பட்டது. ஒரே வருடத்தில் இதை ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளது. . இது ஈரானின் முதல் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையாகும். அதன் அதிக சூழ்ச்சித்திறன், வேகம் காரணமாக இஸ்ரேலின் அயர்ன் டோமை மிஞ்சி.. இஸ்ரேல் உள்ளே புகுந்து இந்த ஏவுகணை தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்டது.
ஃபத்தாஹ் என்ற.. அதன் பெயர், அரேபிய மொழியில் “வெற்றி கொண்டவர்” அல்லது “வெற்றியைக் கொண்டுவருபவர்”, “வெற்றியாளர்” என்று பொருள்படும். இதன் மாடல் இரண்டு அதாவது ஃபத்தாஹ் 2 கடந்த நவம்பரில் கொண்டு வரப்பட்டது. 350-450 kg எடை கொண்டது இது. 1400 கிலோ மீட்டர் பயணித்து தக்க கூடியது. ஒலியின் வேகத்தை விட 13 மடங்கு அதிக வேகத்தில் இது செல்ல கூடியது.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/str-48-is-a-problem-to-start-without-interruption-simbu-needs-to-finish-some-issues-filmmakers/
ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்பது ஹைப்பர்சோனிக் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஒரு ஆயுதமாகும், இது ஒலியின் வேகத்தை விட 5 முதல் 25 மடங்கு வேகத்தில் செல்லும். இல்லையென்றால் 1 to 5 மைல்கல் நொடிக்கு போகக்கூடிய (1.6 to 8.0 km/s) வேகத்தில் செல்லும். இதன் வேகத்தை மேக் 5 என்றும் கூறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.