பஞ்சாப் என்றாலே சாம்சனுக்கு பாயாசம் குடிப்பது போலவா எதிர்கொள்ளக் கத்திருக்கும் தவான்

2 Min Read
சஞ்சு சாம்சன்

ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்கு எதிராக இதுவரை 19 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இதுவரை ஒரு சதம் உட்பட 658 ரன்களை குவித்துள்ளார். இதனால் இன்றைய ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி உச்சத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் பெரிதாக நம்புகிறார்கள்.

- Advertisement -
Ad imageAd image

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இன்று நடக்கவுள்ள 8வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடுகிறது. அசாம் மாநிலத்தை மையமாக வைத்து ஐபிஎல் அணி இல்லையென்றாலும், இது ராஜஸ்தான் அணிக்கான உள்ளூர் ஆட்டமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரியான் பராக்கிற்கு உள்ளூர் ரசிகர்கள் அதிகளவில் ஆதரவு அளிப்பார்கள். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால், கேரளாவிலும் ராஜஸ்தான் அணிக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அண்மை காலமாக சஞ்சு சாம்சனுக்கான வளர்ச்சியும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அபரிவிதமாக இருக்கிறது. சென்னை, அயர்லாந்து, ராஜஸ்தான், மும்பை என்று ஏராளமான பகுதிகளில் சஞ்சு சாம்சனின் பேட்டிங்கை காண்பதற்காக ரசிகர்கள் குவிந்தனர்.
அதற்கேற்றாற்போல் சஞ்சு சாம்சனும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். பஞ்சாப் அணிக்கு எதிராக 143 ஸ்ட்ரைக் ரேட்டில் 41.13 சராசரி வைத்திருக்கும் சஞ்சு சாம்சன், அவரின் அதிகபட்ச ஸ்கோரான 119 ரன்களை பஞ்சாப் அணிக்கு எதிராக அடித்துள்ளார்.

பட்லர் பஞ்சாப் அணியுடனான போட்டியென்றால், சாமி வந்து ஆடுவது போல் பவுண்டரியும் சிக்சருமாய் வெளுத்து வாங்குவார். அதேபோல் பஞ்சாப் அணி என்றால் சஞ்சு சாம்சனும் அதிரடியாக ஆடுவார் என் எதிர்பார்கப்படுகிறது.

இதனால் நடப்பு ஐபிஎல் தொடர் கேப்டனாக மட்டுமல்லாமல், வீரராகவும் சஞ்சு சாம்சனுக்கு சிறந்த தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பேக் அப் விக்கெட் கீப்பராக உள்ள இஷான் கிஷன் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் சஞ்சு சாம்சனுக்கு இது மிகப் பெரும் வாய்ப்பாகும். ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் 500 ரன்களுக்கு மேல் அடிக்கும் பட்சத்தில் உலகக்கோப்பைத் தொடருக்கும் தேர்வாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Share This Article

Leave a Reply