IPL : குஜராத் மீண்டும் அசத்தல் வெற்றி!

2 Min Read
வார்னர்- பாண்டியா

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ் அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது.

- Advertisement -
Ad imageAd image

ஐபிஎல் 16ஆவது சீசனின் 7ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

டெல்லி இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு எதிராக குஜராத் அணிக் கேப்டன் ஹார்திக் பாண்டியா, முதலில் வேகப்பந்ந்து வீச்சாளர்களை பயன்படுத்தினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி இருவரும் இணைத்து அதிரடியாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரம்:

டேவிட் வார்னர் 37 (32 பந்துக்கள் ), ரிலே ரூசோவ் 0 (1 பந்து) விக்கெட்டை அல்ஜாரி எடுத்துக் கொடுத்த நிலையில், பிரித்வி ஷா 7 (5 பந்துக்கள்), மிட்செல் மார்ஷ் 4 (4பந்துக்கள்) ஆகியோரது விக்கெட்களை ஷமி வீழ்த்தினார். இப்படி வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால், ரஷித் கானுக்கு 14ஆவது ஓவரின்போதுதான் வாய்ப்பு கிடைத்தது.

ரஷித் கான் அபாரம்:

இந்நிலையில், ரஷித் கான் தனது பங்கிற்கு சர்பரஸ் கான் 30 (34), அபிஷேக் ஷர்மா 20 (11), அமன் கான் 8 (8) ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதனால், டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 162/8 ரன்களை மட்டும்தான் சேர்த்தது.

குஜராத் அணி இன்னிங்ஸ்:

இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில் ஓபனர்கள் விருத்திமான் சாஹா 14 (7), ஷுப்மன் கில் 14 (13), கேப்டன் ஹார்திக் பாண்டியா 5 (4) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக வீரர்கள் சாய் சுதர்ஷன் 62 (48), விஜய் சங்கர் 29 (23) ஆகியோர் சிறப்பான முறையில் விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இறுதியில், டேவிட் மில்லர் 31 (16) அதிரடி காட்டியதால், குஜராத் டைடன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 163/4 ரன்களை குவித்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

சேஸிங்கில் கில்லி:

குஜராத் டைடன்ஸ் அணி இதுவரை 10 முறை சேசிங் செய்து, 9 முறை வென்றுள்ளது. ஒரேயொருமுறை, மும்பைக்கு எதிரான சேசிங்கில் மட்டும்தான் தோற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article

Leave a Reply