பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் சுவாரஸ்ய தகவல்கள்!

1 Min Read
பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி 14 ஜூலை 2023 அன்று பாரிஸில் உள்ள எலிசி அரண்மனையில் ஃபிரான்ஸ் அதிபர் மேதகு இம்மானுவேல் மேக்ரானுடன் ஆலோசனை மற்றும் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

- Advertisement -
Ad imageAd image

இருதரப்பு ராணுவம் மற்றும் பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு, விண்வெளி, பருவநிலை மேம்பாட்டு நடவடிக்கை மற்றும் மக்களுக்கு இடையேயான உறவு உள்பட பரந்த அளவில் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.

இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம், இந்தோ-பசிபிக் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகளின் பரஸ்பர நலன்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. “ஹொரைசன் 2047: இந்தியா-ஃபிரான்ஸ் உத்திகள் கூட்டுறவின் எதிர்காலத்தை திட்டமிடுதல்” உள்ளிட்ட எழுத்துப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

செப்டம்பர் 2023-ல் நடைபெறும் ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு புதுதில்லியில் அதிபர் மேக்ரானை வரவேற்க ஆவலாக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

இதனையடுத்து , பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஃபிரான்ஸ் அதிபர் மேதகு இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் 14 ஜூலை 2023 அன்று பாரிஸில் உள்ள குவாய் டி’ஓர்சேயில் முன்னணி இந்திய மற்றும் ஃபிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகளின் குழுவில் கூட்டாக உரையாற்றினர்.

இந்திக் கூட்டத்தில் விமானப் போக்குவரத்து, உற்பத்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், இந்தியாவுக்கும் ஃபிரான்சுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் இந்தத் தொழில்துறை தலைவர்களின் பங்கை பிரதமர் பாராட்டினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஸ்டார்ட்அப், மருந்து, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

Share This Article

Leave a Reply