பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.
அண்மையில் பிரசல்ஸ் நகரில் முதலாவது அணுசக்தி உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பெல்ஜியம் பிரதமர் டி குரூவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பெல்ஜியம் இடையே சிறந்த உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். வர்த்தகம், முதலீடு, தூய்மை தொழில்நுட்பங்கள், குறைக்கடத்திகள், மருந்துகள், பசுமை ஹைட்ரஜன், தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

ஐரோப்பிய யூனியனுக்கு பெல்ஜியத்தின் தலைமையின் கீழ் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது என்று இரு தலைவர்களும் உறுதி செய்தனர்.
பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்த கருத்துக்களை அவர்கள் பரிமாறிக் கொண்டனர். மேற்கு ஆசிய பிராந்தியம் மற்றும் ரஷ்யா – உக்ரைன் மோதலில் அமைதி மற்றும் பாதுகாப்பை விரைவில் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.