பத்தாண்டு பாஜக ஆட்சியில் 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் மோடி மற்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில், இன்று உலகத்திலேயே வேலையில்லா இளைஞர்கள் அதிகம் வாழக்கூடிய நாடுகளில் இந்தியா முதலிடம் வகிப்பதாக கூடலூர் தேர்தல் பிரச்சாரத்தில் ஆ. ராசா குற்றச்சாட்டு.

இந்தியா கூட்டணியின் நீலகிரி நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.ராசா அவர்கள் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கொளப்பள்ளி, சேரம்பாடி, பந்தலூர் ஆகிய பகுதிகளில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.
அப்போது தோட்டத் தொழிலாளர்கள் உற்சாகத்துடன் ஆ.ராசாவுக்கு வரவேற்பளித்தனர். அப்போது பேசிய ஆ. ராசா கூறுகையில்;-

கடந்த ஐந்தாண்டு எடப்பாடி ஆட்சியில் தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் பணியாற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் போனஸ் வழங்கப்படாமல் இருப்பதால் தோட்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் கூறிய நிலையில் கோரிக்கை வைத்து 8 மணி நேரத்திற்குள் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தோட்டத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் சம்பள உயர்வு வழங்கிய ஒரே முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்பதை யாரும் மறந்திட முடியாது என்றார்.

மேலும் அவர் பேசுகையில்;- பாஜக ஆட்சிக்கு வந்தால் பத்து ஆண்டுகளில் இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடி பேர் விதம் 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என பாஜக கூறிய நிலையில்,
இன்று உலக அளவில் இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் அதிகம் வாழக்கூடிய நாடாக இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆ. ராசா குற்றம் சாட்டினார்.

அப்போது பிரச்சாரத்தின் போது மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ,மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், கூடலூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திராவிட மணி, ஒன்றிய செயலாளர் சிவானந்த ராஜா உட்பட திமுகவினர் உடன் இருந்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.