கல்வி அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்த வருமான வரி உத்தரவு : இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.!

2 Min Read
  • நிதியை சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தியதாக கூறி, கல்வி அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்த வருமான வரி உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அறிவியல், மருத்துவம், பொறியியல், கணினி அறிவியல் உள்ளிட்ட துறைகளில் கல்லூரிகளை தொடங்கி மாணவர்களுக்கு உயர் கல்வி வழங்குவதற்காக கடந்த 1984 ம் ஆண்டு ஸ்ரீலட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த கல்வி அறக்கட்டளையின் கீழ் இயக்கும் 8க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மூலம் வருமானங்கள் அனைத்தும் ஸ்ரீலட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

- Advertisement -
Ad imageAd image
 

இந்நிலையில் கடந்த 2016 ம் ஆண்டு அறக்கட்டளையின் அலுவலகம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் வீட்டில் திடீர் சோதனை நடத்தி சில ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.இது தொடர்பாக கடந்த 2017 ம் ஆண்டு வருமான வரித் துறை உதவி ஆணையர், அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பி, 2011-12 மற்றும் 2016-17 ஆண்டுகளில் பெறப்பட்ட வருமான விவரங்களை அளிக்க உத்தரவிட்டிருந்தார்.இந்த நோட்டீசுக்கு பதிலளித்த அறக்கட்டளை, கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டு, கல்லூரிகளுக்கான கட்டிடங்கள் கட்ட செலவழிக்கப்பட்டதாக விளக்கமளித்தது.

இந்நிலையில் 2024 ஆகஸ்ட் மாதம், ஸ்ரீலட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை பதிவை வருமான வரித்துறை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை தரப்பில் அதன் நிர்வாகி ஸ்ரீநிஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், கல்லூரிக்கு நன்கொடை வசூலித்தாகவோ, நிதியை தவறாக பயன்படுத்தியதாகவோ, சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் கல்வி பயன்பாட்டிற்கு மட்டுமே நிதி செலவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொஞ்சம் இதையும் படிங்க :  http://thenewscollect.com/in-broad-daylight-a-gang-of-nine-members-hacked-a-raider-named-saranraj-near-kumbakonam/

மேலும் அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்ததால், கல்லூரிகள் செயல்பட முடியாமல், மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், வருமான வரித் துறை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்; அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article

Leave a Reply