திருப்பத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷின் அக்கா மருமகன் நவீன் வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூபாய் 40 லட்சம் ரொக்கம் மற்றும் பல ஆவணங்கள் சிக்கியுள்ளன.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அதேசமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கி உள்ளன. அதேசமயம் திருப்பத்தூர் மாவட்டம், அடுத்த திருநாதர் முதலியார் என்ற பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ, ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

இவர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷின் அக்காள் மருமகன் ஆவார்.
இத்தகைய சூழலில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்வது குறித்து வருமான வரித்துறையினருக்கு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நவீன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது ரூ. 40 லட்சம் ரொக்கம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேசமயம் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற பல்வேறு கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது வருமான வரித்துறை சோதனையின் மூலம் ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.