அதன் ஒரு பகுதியாக ஈரோடு திண்டல் அருகே உள்ள சக்தி நகரில் செந்தில் பாலாஜியின் உறவினர் சச்சிதானந்தம் என்பவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை செய்து வருகின்றனர்.
சச்சிதானந்தம் என்பவர் ஈரோடு டாஸ்மாக் கடைகளிலிருந்து மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகிக்கும் போக்குவரத்து ஒப்பக்காரராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது வீட்டில் இன்று காலை அதிரடியாக நுழைந்த வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்த மடிக்கணினி, கணினி மற்றும் சச்சிதானந்தம் பயன்படுத்தி வந்த டைரி உள்ளிட்டவர்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் சச்சிதானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பயன்படுத்தி வந்த வங்கி கணக்குகள் மற்றும் வங்கி லாக்கர்கள் போன்றவற்றின் ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் அவரது வீட்டில் உள்ள பத்திரங்கள், நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள் போன்றவற்றையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையின் காரணமாக ஈரோடு சக்தி நகர் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் வருமான வரி சோதனை நடைபெறும் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் குவிந்துள்ள திமுக தொண்டர்களுக்கு வெஜ் பிரியாணி தயிர் பச்சடி மதிய உணவாக வழங்கப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.