கோவை புறநகர் பகுதியையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான யானைகள், காட்டெருமைகள், புள்ளி மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது.
இதனால் வனவிலங்குகள் உணவு, குடிநீரை தேடி வனத்தையொட்டி உள்ள கிராம பகுதிகளுக்குள் படையெடுத்து வருகின்றன. வனத்துறையினரும் வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

இருப்பினும் யானைகள் உணவு, குடிநீரை தேடி வனத்தையொட்டி உள்ள கிராம பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் யானைகள் மீண்டும் இரவு வனத்திலிருந்து வெளியே வந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அடிவாரத்தில் இருந்து வெளி வந்த யானைகள் அருகில் உள்ள தோட்டங்களுக்குள் உலா வந்து கிராமப் பகுதிகளுக்கும் சென்றுள்ளது.

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கடந்த இரண்டு வாரங்களாக சுற்றி வரும் காட்டு யானைக் கூட்டத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து விவசாய நிலங்களை அந்த யானைகள் சேதப்படுத்தி வருகின்றன.

கோவை மாவட்டம், அடுத்த வால்பாறை பகுதியில் யானைகள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. இந்த நிலையில் வால்பாறையை அடுத்த சிறுக்குன்றா எஸ்டேட் எல்.டி.பகுதியில் இரவு கூட்டமாக வந்த யானைகள் அங்கிருந்த ரேஷன் கடையை உடைத்து அதிலிருந்த அரிசி, பருப்பு மீதமுள்ள பொருட்களை சாப்பிட்டு அங்கும், இங்கும் அள்ளி வீசி சென்றது.

பின்பு பரமேஸ்வரன் என்பவர் நடத்தி வந்த மளிகை கடையை திடீரென்று காட்டு யானைகள் உள்ளே புகுந்து உடைத்து மளிகை பொருட்கள் திபண்டங்கள் ஆகியவற்றை சாப்பிட்டு சேதப்படுத்தியது.
இதனை அறிந்த அந்த பகுதி தோட்ட தொழிலாளர்கள் கடையை சேதபடுத்திய காட்டு யானைகளை கூச்சலிட்டு அங்கிருந்து விரட்டினர். பின்பு அருகிலிருந்த வனபகுதிக்கு சென்று தஞ்சமடைந்தன. மேலும் குரங்குமுடி பகல் நேரத்தில் தேயிலைத் காட்டில் முகாமிட்டுள்ளது.

அப்போது ஹைபாரெஸ்ட், சோலையார் பாலாஜி கோவில், சின்ன கல்லார் பகுதிகளில் குழுவாக யானைகள் சுற்றி வருகிறது. இந்த சம்பவம் அந்த கிராம பகுதியில் காட்டு யானைகள் உள்ளே புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அண்மை காலமாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுவது அதிகரித்து இருப்பதால், அவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.