பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு வெடித்த மோதல் – கலவர பூமியான வழுதலம்பேடு…

2 Min Read

கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற எட்டியம்மன் திருக்கோயில் உள்ளது. 1998 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவில் அறநிலை துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பட்டியலின மக்கள் பூஜை செய்ய அனுமதிக்காத காரணத்தால் அப்போது கோவில் மூடப்பட்டு வருவாய் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து 22 வருடங்கள் கழித்து இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

வட்டாட்சியர் சரவணகுமார்

முன்னதாகவே வழுதலம் பேடு காலனி பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவண குமாரியிடம் தங்களை தாழ்த்தப்பட்ட சமூகம் என்ற காரணத்தால் கோவிலுக்குள் அனுமதிக்க மாற்று சமூகத்தைச் சார்ந்தவர்கள் மறுப்பு தெரிவிப்பதாக புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நேற்றிரவு சுமார் 12 மணி அளவில் இரு தரப்பினருக்கும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரவோடு இரவாக இரு சமூக மக்களிடையே சுமுக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

அப்போது பட்டியலின மக்கள் கோவிலுக்கு பூஜைகள் செய்ய ஒப்புக்கொண்ட நிலையில் பிரச்சனைகள் நடைபெறாவண்ணம் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த தரப்பினர் முதலிலும், பட்டியலின வகுப்பைச் சார்ந்த மற்றொரு தரப்பினர் அதன் பின்னரும் கோவிலில் பூஜை செய்ய முன்னேற்பாடுகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் நடைபெற்றது. அதன்படியே கோவில் நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோவிலுக்கு பூஜை செய்ய சென்றபோது மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த பலர் கோவிலுக்கு செல்லும் வழி பட்டா நிலம் எனக் கூறி பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல வழிவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இத எடுத்து போலீஸாரால் மாற்று பாதை காட்டப்பட்ட பின்னரும் அந்த பாதையையும் மாற்று சமூகத்தினர் மரித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவிலில் பூஜை செய்ய மறுக்கப்பட்ட பட்டியல் இன மக்கள் அங்கிருந்து வந்து ரெட்டம் பேடு – கும்மிடிப்பூண்டி சாலையில் வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள்.

அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசம் செய்த நிலையில் சம்பவ இடத்திற்கு பொன்னேரி கோட்டாட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தபோது அவர்களை கோயில் பகுதிக்கு செல்ல விடாமல் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில் கோவில் கோட்டாட்சியர் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்பட்டது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த எட்டியம்மன் கோவில் பட்டியலின மக்களை கோவில் வழிபாட்டிற்கு அனுமதிக்காத காரணத்தால் இரண்டாவது முறையாக அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share This Article

Leave a Reply