- சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், 36 ஊராட்சிகளுக்கு ரூ.27 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்.
தஞ்சாவூர் மாவட்டம், பூக்கொல்லையில் உள்ள, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியத்துக்குட்பட்ட 36 ஊராட்சிகளுக்கு, ரூ.27 லட்சம் மதிப்பிலான, “டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” தொகுப்பு வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில், ஊரகப்பகுதி இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் செப்டம்பர் 26 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தைச் சேர்ந்த, கும்பகோணம் விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினினால் நேரடியாக வழங்கப்பட்ட ஒரு ஊராட்சியை தவிர்த்து, மற்ற 36 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பூக்கொல்லையில் உள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக் குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலர்கள் எஸ்.நாகேந்திரன், எஸ்.சடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/in-the-school-education-department-the-madras-high-court-ordered-to-extend-the-ban-imposed-on-the-appointment-of-graduate-teachers/
இதில், 33 விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு 36 ஊராட்சி மன்றத் தலைவர்களிடம், ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் வழங்கினார். இதில், தொடர்புடைய ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.