கரூரில் தாறுமாறாக கனரக வாகனத்தை இயக்கி அரசு பேருந்தின் பின் பகுதியில் மோதி விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரால் இளைஞர் ஒருவருக்கு படுகாயம். மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பாலான விபத்துக்களுக்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவு மிக முக்கிய காரணம். மொபைல்போன் பேசுவது, சாப்பிடுவது, மியூசிக் சிஸ்டத்தை இயக்குவது போன்ற பல்வேறு காரணங்களால் கவனக்குறைவு ஏற்படுகிறது. குடிபோதையில் நிதானமின்றி வாகனம் ஓட்டுபவர்களால் ஏராளமான விபத்துக்கள் நடக்கின்றன.

மதுபோதையில் இருக்கும்போது வாகனங்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. குடியானது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்கக் கூடியது. பிறருக்கு அச்சுறுத்தும் வகையில், வாகனத்தை கண்ணை மூடிக்கொண்டு தாறுமாறாக செலுத்துவதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மிகப்பெரிய விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகின்றது.

பிற வாகன ஓட்டுநர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு வாகனத்தை ஓவர்டேக் செய்வது, சண்டைப்போட்டுக்கொண்டு கோபத்துடன் வாகனத்தை தாறுமாறாக ஓட்டுவது விபத்தை ஏற்படுத்துவதற்கான காரணங்களாக அமைகின்றது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் TATA ACE கனரக வாகனத்தை ஓட்டி வந்த ஆட்டோ ஓட்டுனர் இருசக்கர வாகனங்கள் மீது லேசாக மோதியதால், வாகன ஓட்டிகள் அவரை பின் தொடர்ந்து துரத்தி வந்துள்ளனர்.

இதனால் பதற்றம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் தாறுமாறாக வாகனத்தை இயக்கியதால், கரூர் – திருச்சி பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது மோதியதோடு, அவ்வழியாக வந்த அரசு பேருந்தின் பின்பகுதியில் ஆட்டோவானது மோதி நின்றது.

அதில் கனரக ஆட்டோவின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும், அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கு படுகாயம் ஏற்பட்டு, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து தாறுமாறாக ஆட்டோவை இயக்கிய ஓட்டுநரை பொதுமக்கள் கரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அப்போது வாகன ஓட்டுனர் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் கனரக ஆட்டோ அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.