தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து பேசிய அவர், தமிழகத்துக்கு 4 பேர் அடங்கிய பாஜக மத்திய குழு வரும் 27ம் தேதி வருகிறார்கள். சென்னையில் ஒரு சில நபர்களையும் சந்திக்க உள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சியில் நோட்டிஸ் இல்லாமல் கைது செய்து வருகிறார்கள். நீதி துறை மீது அதிக பிரஷர் செய்கிறார்கள்.
திமுக ஆட்சி அதிகாரம் மீது அடிப்படை ஆதரதோடு நிரூபிக்க உள்ளோம் அதற்கான மத்திய குழு செயல் பட்டு வருகிறது. ஒவ்வொரு புகார் அடிப்படையிலும் அதற்கேற்றவாறு எங்களுடைய வாதத்தையும் சமர்ப்பிக்க உள்ளோம். நடிகை கௌதமி புகார் தெரிவித்த நபருடன் 25 ஆண்டு காலமாக பழக்கம் உள்ளவர்..அவருடைய புகார் ஆமை வேகத்தில் தான் சென்று கொண்டு இருக்கிறது.

அதே போல் அந்த நபர் பாஜகவை சார்ந்தவரே இல்லை. காவல் துறை விரைந்து செயல் பட வேண்டும். நடிகை கௌதமி கட்சியில் இல்லை என்றாலும் அவருக்கு உறுதுணையாக நான் இருப்பேன். முதல் கட்டமாக 27, 28 ஆகிய 2 நாட்கள் இந்த குழு கொடுத்து இருக்கிறார்கள். இந்த புகார் வெறும் கொடிகம்பம் விவகாரம் மட்டும் அல்ல. இவர்கள் ஒரு பாட்டேர்ன் மூலம் செய்கிறார்கள்.
காங்கிரஸ் புகார் தெரிவிப்பதும், அதற்கு உடனே நடவடிக்கை எடுப்பதும், என்பதுமாய் திமுக காவல் துறை செயல்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் போட்டியில் இந்தியா கொடி அனுமதி இல்லை என்பது ஏற்று கொள்ள முடியாது. பொன்முடி மகன் அதன் தலைவராக உள்ளார். அவர்கள் தேவைக்காக தேசிய கொடியை குப்பையில் போட சொல்லும் அளவுக்கு அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

இதற்கு ஐசிசி கமிட்டியும் காவல் துறையினரும் பதில் சொல்ல வேண்டும்.தேசிய கொடியை அனுமதிக்காதது தவறு. அதிலும் குப்பை தொட்டியில் போட வைப்பது அதைவிட கொடுமை. நடிகை கௌதமி விவகாரத்தில் அதிக அக்கறை கொண்டதும் நாங்கள் தான். அவர்களுக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும். அவர்கள் தற்போது மனஉளைச்சல் உள்ளார். ஆனால் இதற்கும் பாஜக கட்சிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.
Leave a Reply
You must be logged in to post a comment.