கோவை மாவட்டம், பேரூர் வட்டம் இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் அமெரிக்க கவுண்டர் பழங்குடி மக்களுக்கு வழங்கிய 44.3 ஏக்கர் நிலத்தை ஈசா யோக மைய ஆட்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தியது தொடர்பாக கடந்த 2016 டிசம்பரில் அனைத்து முற்போக்கு இயக்கங்கள் இணைந்து பெரும் போராட்டம் நடத்தியதில்,
கோவை மாவட்ட தெற்கு வருவாய் கோட்டாச்சியர் தலைமையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகு 44.3 ஏக்கர் நிலத்தை பத்திரபதிவு செய்யக்கூடாது என்றும், மேலும் நிலத்தை வேறு யாரும் பயன்படுத்த கூடாது எனவும் பேரூர் வட்டாச்சியர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஈசா யோக மையாம் மின்மயானம் ஒன்றை கட்டி 44.3 ஏக்கர் நிலத்தில் குளம் ஒன்றை வெட்டி மின்மாயன கழிவுகளை கொட்டி பழங்குடி மக்கள் அந்த நிலம் கிடைத்தாலும் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்த ஈசா பவுன்டேசன் நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து,
உண்மை நிலவரம் என்ன என்பதை அறிய முற்போக்கு அமைப்புகள் சார்பாக உண்மை அறியும் குழு மூலமாக கள ஆய்வு செய்ய சென்ற போது ஈசா யோக பைய அடி ஆட்கள் (குண்டர்கள்) வாகனத்தை தடுத்து கண்ணாடியை உடைத்து தோழர்களை தாக்கினர்.

தலைமை செயல் அதிகாரி தினேஷ் ராஜா, வெங்கட்ராஜா, நந்தகோபால் ஈசா பணியாளர் முள்ளங்காடு சசிகலா உட்பட 50 க்கும் மேற்பட்டோர் காவல்துறை முன்னிலையிலே.
இரவுடிகள் போல் கொலைவெறியோடு தாக்குதல் நடத்த முயற்சித்தனர். நமது வாகனத்தை எடுக்க முடியாமல் டிராக்டரை கொண்டு மறித்து அராஜகத்தில் ஈடுப்பட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.