கோவையில் சமத்துவம், சகோதரத்துவம் தழைத்தோங்க மும்மதத்தார் கொண்டாடிய “சமத்துவ கிறிஸ்துமஸ் விழா” வேற்றுமையில் ஒற்றுமைகாக தேவாலயத்துக்கு வந்தவர்களை பூங்கொத்து தந்து, இனிப்புகள் ஊட்டி உற்சாகமாக வரவேற்ற இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள்.
கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இதனை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. கிறிஸ்தவர்கள், கிறிஸ்து பிறப்பை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் தற்போது மின்னொலியில் ஜொலித்து வருகின்றன. ஆட்டு கொட்டகையில் இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் பெரும்பாலான தேவாலயங்களில் குடில் அமைக்கப்பட்டு இருந்தது.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையிலே கோவையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, சமத்துவம், சகோதரத்துவம், நல்லிணக்கத்துடன் கிறிஸ்மஸ் விழா கொண்டாடினர். ரத்தினபுரியில் உள்ள செயின் பால் சர்ச் வளாகத்தில், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி சார்பாக இந்த விழா ஏற்பாடு செய்திருந்தனர். இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மும்மதத்தார் ஒன்றிணைந்து தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக வந்தவர்களை பூங்கொத்து தந்து, இனிப்புகள் ஊட்டி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து தேவாலயத்துக்கு உற்சாகமாக வரவேற்றனர்.
மடாதிபதிகள், ஃபாதர்கள், முஸ்லீம் மத போதர்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடிய இந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில், அனைவரும் ஒருவருக்கொருவர் இனிப்புகள் ஊட்டி, கைகோர்த்து அன்பை வெளிப்படித்தி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து ஒற்றுமையை நிலைநாட்டினர். நாட்டில் ஒற்றுமை ஓங்கி சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்க, மத நல்லிணக்கம் சார்ந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினர். மதங்கள் வேறாயினும், மனம் ஒன்று என்பதனை வெளிப்படித்திய இந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழா, நாடெங்கும் மக்களால் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினர்.

நமது நாட்டில் பாகுபாடின்றி அனைவரும் அன்பை போதித்து, அனைத்து மத பண்டிகைகளை சமத்துவ விழாவாக மும்மதத்தவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையுடன் நல்லிணக்கத்துடன் கொண்டாட அறிவுறித்தினர். இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இன்றிணைந்து சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாடியது பலரை பாராட்ட செய்தது. சமத்துவ கிறிஸ்துமஸ் பண்டிகையை பத்து வருடங்களுக்கு மேலாக கொண்டாடுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர் .
Leave a Reply
You must be logged in to post a comment.