வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவுக்கான விசாரணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலை, அறிவியல், இலக்கியம், பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு, வீட்டுமனைகள் ஒதுக்கும் வகையில் அரசு விருப்புரிமை ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ், எந்த ஆவணங்களும் இல்லாமல், ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வின், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டுமனைகள் கடந்த 2008ஆம் ஆண்டில் ஒதுக்கீடு அரசு ஒதுக்கியது.
இந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தி சுயலாபம் அடைந்ததாகவும், அதற்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறி, ஜாபர் சேட், பர்வின், வீட்டுவசதி வாரியத்தின் அப்போதைய செயல் பொறியாளர் முருகையா, முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கம், அவரது மகன் துர்கா சங்கர், அப்போது வீட்டு வசதி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, (தற்போது அமைச்சர்), மற்றும் டி.உதயகுமார் ஆகிய ஏழு பேருக்கு எதிராக 2013ஆம் ஆண்டில் இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டி வழக்கு பதிவு செய்தது.
கடந்த 2019ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ப்பட்டது.
இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐ.பெரியசாமி, பர்வீன், கே.ராஜமாணிக்கம், ஆர்.துர்காசங்கர் ஆகிய நான்கு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இவர்களது கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பர்வீன் உள்ளிட்டோர் தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு மனு விசாரித்த உச்ச நீதிமன்றம் ஐ.பெரியசாமி தவிர மற்ற அனைவருக்கும் எதிரான வழக்குகளை ரத்து செய்தம் விடுவித்தும் உத்தரவிட்டது.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையின் சார்பில் பதிவு செய்த வழக்கு சென்னையில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.
ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகவில்லை அவரின் தரப்பில் ஆஜராக விலக்கு கோரி மனு தாக்கல் செய்யபட்டது. இதனை ஏற்று கொண்டு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் நீங்கள் மட்டுமே உள்ளீர்கள் மற்றவர்கள் மீதான வழக்குகள் விடுவித்து/ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
ஐ. பெரியசாமி தரப்பில் ஆஜராக இருந்த வழக்கறிஞர் கடைசி வாய்ப்பாக இதனை கோருவதாகவும். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால் இதனை தள்ளி வைக்க வேண்டுமென கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி இதனையே எத்தனை முறை கூறிவீர்கள் என கேள்வி எழுப்பினார்.
அப்போது லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த அதிகாரியிடம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நீங்கள் எதிர் மனுதாராக உள்ளீர்களா? வழக்கு தொடர்பான ஆவணங்கள் உங்களுக்கு கிடைக்குமா? என நீதிபதி கேட்டார்.
உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் அமலாக்கத்துறை மட்டுமே எதிர்மனுதாரராக உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை இல்லை எனவும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் தங்களுக்கு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை சிறப்பு நீதிமன்றத்தில் அளிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதி தெரிவித்தார்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/why-government-opens-medical-colleges-if-you-cant-appoint-a-dean-madurai-high-court-question-to-health-secretary/
பின்னர் நீதிபதி அடுத்த விசாரணையின் போது குற்றச்சாட்டை பதிவு தொடர்பாக நடைபெறும் எனவும் தெரிவித்த நீதிபதி விசாரணையை செப்டம்பர் மாதம் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.