கோவை மாவட்டம், அடுத்த சூலூர் அருகே முத்து கவுண்டன் புதூர் பகுதியில் பாஜக நாடாளுமன்ற தொகுதி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-

தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறோம். அடுத்த கட்ட தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த இது பயன்படும். கள்ளக்குறிச்சி சென்ற போது சிலர் டாஸ்மாக் மது தண்ணீர் போல் இருப்பதாக சொன்னார்கள்.

போதை அதிகமாக வேண்டும் என்பதால் கள்ளசாராயத்தையும், கஞ்சாவையும் நோக்கி நாங்கள் செல்கிறோம் என சிலர் சொன்னார்கள். தமிழ்நாட்டில் மது விலக்கு என்பது 100 சதவீதம் சாத்தியமில்லை. படிப்படியாக கள்ளு கடைகளை திறந்துவிட்டால் மதுக்கடைகளை குறைக்கலாம்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அனுமதி இல்லாமல் கர்நாடகாவால் அணை கட்ட முடியாது என சட்டம் இருந்தும் இது தொடர்ந்து அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.