திமுக நல்லாட்சி செய்தால் ஏன் அமைச்சர்கள் வீதியில் இறங்கி வாக்கு சேகரிக்க வேண்டும் தங்களுடைய சாதனைகளை சொல்லியே வாக்கு கேட்கலாம் அல்லவா விக்கிரவாண்டி பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு.
திண்டுக்கல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு 5 ஆண்டுகளில் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்தவர் எம்ஜிஆர் அவர்கள். அதே உதாரணம் தான் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் அன்புமணி ராமதாஸ் பேச்சு.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பத்தாம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பரப்பரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் நேற்று விக்கிரவாண்டியில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜிகே வாசன், ரவி பச்சமுத்து, ஜான்பாண்டியன் போன்றோர் கலந்து கொண்டு பாமக வேட்பாளர் அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். அப்போது பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை…
திமுக நல்லாட்சி செய்திருந்தால் அந்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க வேண்டியதுதானே அதைவிடுத்து அமைச்சர்களை வீதியில் இறக்கி விட்டு பணம் செல்வது செய்து எதற்கு ஓட்டு வாங்க வேண்டும். அப்படியானால் நல்லாட்சி செய்யவில்லை என்று தானே அர்த்தம். திமுக நிர்வாகி ஒருவர் நாய் கூட பிஏ படிக்கிறது என்று நம்மை ஏளனமாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுடைய நடவடிக்கை இப்படித்தான் இருக்கும் என்று பேசினார்.
இறுதியாக பேசிய பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் திண்டுக்கல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு 5 ஆண்டுகளில் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்தவர் எம்ஜிஆர் அவர்கள். அதே உதாரணம் தான் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். இரண்டு சாதிகளை மோத விட்டு அதில் அரசியல் லாபம் பார்ப்பது தான் திமுகவிற்கு வேலை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதால் இட ஒதுக்கீடு பாரபட்சமின்றி கிடைக்க வழி செய்யலாம். திமுக பணத்தை வாரி இறைக்கிறது வேட்டி, சேலை என பரிசு பொருட்களாக கொடுக்கிறது காவல்துறை அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நான் கண்ணசைத்தால் போதும் தொண்டர்கள் வேறு மாதிரியாக செய்து விடுவார்கள் அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் போய் முடிந்து விடும் எனவே காவல்துறை தலையிட்டு சரி செய்ய வேண்டும் வெற்றி நிச்சயம் அனைவரும் பாமகவிற்கு வாக்களியுங்கள் அன்புமணியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பேசினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.