நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் மாணவர்களுக்காக வலுவாக குரல் எழுப்புவேன் – ராகுல் காந்தி..!

1 Min Read

நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன். இந்தியா கூட்டணி மீது இளம் வாக்காளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என காங்கிரஸ் எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நீட் தேர்வில் நடந்த மோசடியில் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ்

ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களுடன் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர் என்றும், பலர் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாத மதிப்பெண்களைப் பெறுகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டிய ராகுல்காந்தி,

தேர்வு தாள் கசிவு சாத்தியம் இல்லை என அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணி

கல்வி மாஃபியாக்கள் அரசு அமைப்புகளுடன் இணைந்து தேர்வு வினாத்தாள்களை கசிய விடுவதை தடுக்க சட்டம் இயற்றப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்ததை ராகுல்காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்புவேன் என்றும் ராகுல்காந்தி உறுதியளித்துள்ளார்.

Share This Article

Leave a Reply