அமலாக்கத்துறை பார்த்து நான் பதுங்க மாட்டேன் ஆ.ராசா..!

2 Min Read
ஆ.ராசா

கோவை மாவட்டத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கைகளால் பதுங்கி கொள்ள மாட்டேன். என நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார். பின்பு நிலங்கள் முடக்கப்பட்ட விவகாரத்தில் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கபடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா என்பவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற பேச்சு போட்டியை துவக்கி வைத்தார். பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய ஆ.ராசா, நான் படித்த காலத்தில் கலை கல்லூரியில் மட்டும்தான் பேச்சுபோட்டிகள் நடத்தப்பட்டது.

அமலாக்கத்துறை

ஆனால் பொறியில்,மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். அரசியலில்பொறியியல், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு போதுமான வெளிச்சம் கிடைக்காமல் இருந்ததை இங்கு போக்கி இருக்கின்றோம் என ஆ.ராசா தெரிவித்தார்.

மேலும் பள்ளி பருவத்தில் எனக்கு கலைஞரையும், அண்ணாவையும் தெரியாது எனவும், பரிசுக்காக ஒப்பிவித்த வரிகள் தான் என்னுள் ஏற்பட்ட மாற்றம் என தெரிவித்தார். எனக்கு பரிசு கிடைக்கும் என்பதால்அண்ணா மறைவிற்கு கலைஞர் எழுதிய இரங்கல் கவிதையை படித்தாகவும், அது மாற்றத்தை ஏற்படுத்தியது எனவும் தெரித்தார்.

75 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பிறகு 75 ஆயிரம் கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்து இருப்பதாக பிரதமர் சொல்கின்றார் எனக்கூறிய அவர், 1975 ஆம் ஆண்டுக்கு முன்னாடியே தமிழகத்தில் அத்தனை கிராமங்களுக்கும் மின் இணைப்பு கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி எனவும் தெரிவித்தார். வெற்றி தோல்விகளை தாண்டி, இங்கு இருக்கும் மாணவர்கள் அரசியலில் ஜொலிக்க முடியும் எனவும் ஆ.ராசா மேடையில் தெரிவித்தார்.

ஆ.ராசா

நிகழ்ச்சிக்குப் பின்னர் வெளியில் வந்த ஆ.ராசாவிடம், கோவை திருமலையாம் பாளையம் என்ற பகுதியில் அவரது நிலங்களை அமலாக்கதுறை முடக்கியது குறித்த கேள்விக்கு அமலாக்கத்துறை நடவடிக்கையில் புதியதாக எதுவும் இல்லை எனவும், புதியதாக எதுவும் கண்டுபிடிக்க வில்லை எனவும், அந்த உத்திரவினை படித்து பாருங்கள் என தெரிவித்தார்.

மேலும் அமலாக்கத்துறை நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வீர்களா என்ற கேள்விக்கு? ஏன் பதுங்கிக்குவாங்களா? என ஆ.ராசா பதில் அளித்தபடி கிளம்பி சென்றார். கோவையில் அமலாக்கத்துறையால் ஆ ராசா தொடர்புடைய இடங்கள் முடக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் அது குறித்த அறிவிப்புக்கள் நிலத்தில் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது..

Share This Article

Leave a Reply