இனிமேல் லைஃப்ல ஏர்போர்ட்டில பேட்டி கொடுக்கவே மாட்டேன் – அண்ணாமலை..!

1 Min Read

விமான நிலையத்தில் இனிமே பேட்டி கொடுக்கவே மாட்டேன் என்றும் கட்சி அலுவலகத்தில் மட்டுமே பேட்டி கொடுப்பேன் என்றும், இனிமேல் அனைத்தையும் ஒழுங்குபடுத்த போகிறோம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்றார். அங்கு அவர் அமைச்சராக போகிறார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் அமைச்சர் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக

இந்த நிலையில் டெல்லியில் பதவி ஏற்பு விழாவை முடித்து விட்டு இன்று தமிழகம் திரும்பிய அண்ணாமலையை விமான நிலையத்தில் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் குவிந்த போது இனிமேல் ஏர்போர்ட்டில் பேட்டி அளிக்க மாட்டேன் என்றும், அனைத்தும் இனிமேல் கட்சி அலுவலகத்தில் மட்டுமே பேட்டி என்றும்,

எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த போகிறோம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். விமானத்தில் நாங்கள் வந்து கொண்டிருக்கும் போதே சில விஷயங்கள் நடந்து வருகிறது என்றும்,

இனிமேல் லைஃப்ல ஏர்போர்ட்டில பேட்டி கொடுக்கவே மாட்டேன் – அண்ணாமலை

அது தெரியாமல் நான் பேட்டி அளித்தால் பிரச்சனையாகிவிடும் என்றும், அதனால் இனிமேல் ஏர்போர்ட்டில் பேட்டி கிடையாது என்றும், பேட்டி எப்போது என்பதை முன்கூட்டியே செய்தியாளர்களுக்கு அறிவித்து விடுவோம், அந்த பேட்டியும் கட்சி அலுவலகத்தில் மட்டுமே நடைபெறும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

Share This Article

Leave a Reply