இறுதி கட்டத்திற்கு வரை சென்று பின்னர் மீண்டு வந்துள்ளேன், அதற்கு காரணம் தன்னிடமிருந்த சில கெட்ட பழக்கங்கள் தான் அதற்கு தான் அடிமையாகி விட்டேன்.யாரும் அதுபோல ஆகிவிடாதீர்கள்-ரோபோ சங்கர்

2 Min Read
ஐந்து மாதம் படுத்த படுக்கை-ரோபோ சங்கர்

ஐந்து மாதம் படுத்த படுக்கையாகி இறுதி கட்டத்திற்கு வரை சென்று பின்னர் மீண்டு வந்துள்ள ரோபோ சங்கர், அதற்கு காரணம் தன்னிடமிருந்த சில கெட்ட பழக்கங்கள் தான் அதற்கு தான் அடிமையாகி விட்டேன்.யாரும் அதுபோல ஆகிவிடாதீர்கள் என போதை விழிப்புணர்வு குறித்து கல்லூரி மாணவர்களிடம் ரோபோ சங்கர் உருக்கமான பேசினார்.

- Advertisement -
Ad imageAd image

போதை விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் இணை கமிஷனர் மனோகர், திரைப்பட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் போதையால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதை பழக்கத்தால் ஏற்படும் குற்ற சம்பவங்கள் போதையை ஒழிக்க தமிழக அரசும், போலீசாரும் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறித்த காணொளி காட்சியும் மாணவர்கள் மத்தியில் காண்பிக்கப்பட்டது.

இதில் ரோபோ சங்கர் மாணவர்கள் மத்தியில் பல்வேறு நடிகர்களின் குரல்களில் பேசி (மிமிக்கிரி )  அசத்தினார். கடந்த சில மாதங்களாக மிகுந்த உடல் நலக்குறைவால் இருந்து மீண்டு வந்த ரோபோ சங்கரை மாணவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

இதனை தொடர்ந்து அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில் :

நான்கு மாதமாக உலக சூப்பர் ஸ்டாராக நான் தான் இருந்தேன் அனைவருக்கும் தெரியும் தெரியாத்தனமா கிளிய வளர்த்துட்டேன்
அது என்ன கிளின்னு தெரியாம நான் பட்ட பாடு பெரும்பாடு

ஐந்து மாதம் படுத்த படுக்கையாகி சாவின் விளிம்பிற்கு சென்று விட்டேன் அதற்கு காரணம் என்னிடமிருந்து சில கெட்ட பழக்கங்கள் அதற்கு அடிமையாகி விட்டேன்.உங்களுக்கு இப்போது நான்  முன் உதாரணமாக நான் இருக்கிறேன்.அந்த நேரத்தில் நான் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எல்லாம் சென்று விட்டேன்.

நான் எந்த சமூக வலைத்தள பக்கத்திலும் இல்லை எனக்கு செல்போனில் இரண்டு பட்டன் மட்டும் தான் தெரியும் என்றும்  என மாணவர்கள் மத்தியில் நான் பட்ட அவஸ்தைகள் எவ்வாறு என்பதனை  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி உருக்கமாக பேசினார் நடிகர் ரோபோ சங்கர்.

Share This Article

Leave a Reply