நானே கைது செய்யப்படலாம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி..!

2 Min Read
எடப்பாடி பழனிச்சாமி

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியினர் முன்னிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அவர் நம் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாயப்படும் பலர் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. எதையும் எதிர்நோக்கி தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

- Advertisement -
Ad imageAd image

பாஜக கூட்டணியில் அதிமுக இருந்ததால் மத்தியில் ஆட்சியில் இருப்போர் குறித்து கவலை இல்லாமல் இருந்தோம். பாஜக கூட்டணி காரணமாக பிரதான ஓட்டு வங்கியாக இருக்கும் சிறுபான்மையினர் ஆதரவை இழந்தோம். அதனால் பாஜக உறவு குறித்து மறுப்பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழக பாஜகவுக்கு அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்ட பின் அவர் நம்மை மதிக்காமல் அவரது கட்சியை பலப்படுத்துவதில் தான் முனைப்பாக இருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி

அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜகவை முன்னுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் துடிக்கிறார். நாம் ஏற்கனவே பல இழப்புகளை தாங்கிய நிலையில் அண்ணாமலையின் போக்கும் எதிராகவே இருந்தது. எனவே தான் பாஜக கூட்டணியை முறித்தோம். மிசோரம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபைக்கான தேர்தல் நடக்கிறது. அந்த முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வரும் பட்சத்தில் மீண்டும் கூட்டணியில் சேர சொல்லி நெருக்கடி வரலாம். எந்த சூழ்நிலையிலும் முடிவை மாற்றி நாம் முடிவெடுக்க முடியாது.

அதனால் அதிமுக மீது பாஜக தலைவர்கள் கோபத்தில் இருப்பார்கள். அதனால் நெருக்கடிகள் துவங்கும். அந்த சமயத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ வாயிலாக நம் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு தொல்லை கொடுக்க துவங்குவர். அதன் வாயிலாக நம்மை வழிக்கு கொண்டுவர முடியுமா என்று முயற்சி செய்வார்கள். அதற்கு ஏதுவாக ஏற்கனவே நம்மில் சிலர் வழக்குகளில் சிக்கி உள்ள நிலையில், அந்த வழக்குகளை உயிரோட்டம் பெற்று கைது வரை செல்லலாம். அது எல்லாம் விட என்மீது கூட கைது நடவடிக்கை எடுக்கப்படலாம். கோடநாடு கொலை வழக்கை துரிதப்படுத்தி நெருக்கடி தரலாம், அதனால் வரும் சில மாதங்கள் கட்சியினர் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்க வேண்டியிருக்கும்.

அதிமுக உறுப்பினர்கள்

எனவே எச்சரிக்கையாகவும், கவனமாகவும் செயல்பட வேண்டும் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் எந்த காரணத்தை கொண்டும் தைரியத்தை கைவிடக்கூடாது, என்று பழனிச்சாமி கூறியதாக தெரிகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் கட்சிகளின் நிலை என்னவாக இருக்கும் என்பதை அவர்களே முடிவு செய்யமுடியாத நிலை இருந்து வருகிறது.இன்னமும் மற்ற கட்சிகளின் நிலை என்னவாகுமோ தெரியவில்லை.

Share This Article

Leave a Reply