கோவை ப்ரோட்வே மாலில் திரையிடப்பட்டுள்ள டக்கர் திரைப்படத்தை அப்படத்தின் கதாநாயகர் நடிகர் சித்தார்த் நேரில் கண்டு களித்தார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சித்தார்த்,
டக்கர் திரைப்படம் பொழுதுபோக்காக ஜாலியா பாப்ப் கார்ன் சாப்பிட்டு கொண்டே பார்ப்பதற்கான படம் எனவும் 2k கிட்ஸ்க்கு பிடித்தமான கமர்சியல் படம் எனவும் தெரிவித்தார். மேலும் நான் முதல்முறையாக ஆக்ச்ன் செய்திருக்கிறேன் எனவும் கூறினார்.
என்னைப் பொறுத்தவரை யாரெல்லாம் இளமையாக நினைக்கிறார்களோ அவர்கள் அனைவரும் இளைஞர்கள் தான் கோவையை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் நண்பர்களுடன் திரையரங்குகளுக்கு வந்து திரைப்படத்தை பாருங்கள் என கேட்டுக்கொண்டார்.
இத்திரைப்படம் திரையரங்கில் கரகோஷத்துடன், சிரிப்புடன் படத்தை ரசித்து பார்க்கின்றனர்.யோகிபாபு தான் அதிக சம்பளம் வாங்கி கொண்டு சிரிக்க வைக்கும் நடிகர்.மக்களை சிரிக்கவைப்பத்து மிகவும் கடினம்.
பொதுமக்கள் பொழுதுபோக்கு படங்கள் ரசித்தால் நாங்களும் பொழுதுபோக்கு படங்களை எடுக்க வசதியாக இருக்கும் என்றார்.காதல் படங்களில் இது ஒரு வித்தியாசமான காதல் படம் எனவும் கூறினார்.அடுத்ததடுத்து ஆக்சனுக்கு செல்வது பார்வையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கையில் தான் உள்ளது.
பாய்ஸ் திரைப்படம் வெளியாகி இருபது ஆண்டுகள் ஆகியுள்ளது. 20 ஆண்டுகள் என்பதை 2.0 ஆக எடுத்துக்கொள்கிறேன் எனவும் கூறினார்.
பேன் இந்தியா படமாக மட்டும் அல்லாமல் , பேன் வேர்லட் ஆக படம் பார்க்கபட வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் தான் தற்போது “இந்தியன்-2 வில் நடித்து கொண்டிருக்கிறேன்” எனவும் தெரிவித்தார்.
இசைக்கு அனைத்து படங்களிலும் எப்பவும் முக்கியத்துவம் கொடுப்பேன் என்றார். அரசியல் விமர்சனங்கள் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த்
எங்கே என்ன பேச வேண்டும் என எனக்கு தெரியும், அதை அங்கே பேசிக்கிறேன் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.