இருசக்கர வாகனத்தை திருடிய 24 மணி நேரத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்த போலீசார். போலீசுக்கு திருடன் டஃப் கொடுத்த போதும் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட காவல் துறையினர். குற்றம் குற்றமே நிகழ்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள், திருடன் தரையில் படுத்துக்கொண்டு அலப்பறை செய்வது, போலீசார் திருடனை ஆட்டோவில் ஏற்ற மல்லு கட்டுவது, பொதுமக்கள், கூட்டத்தை கலைக்க வந்த வெளிப்பாளையம் போலீசார். திருடுபட்ட வாகனம் மற்றும் திருடன் புகைப்படம். நாகையில் போலீசாரிடம் ஒரு மணி நேரம் தர்க்கம் செய்த டூவீலர் திருடன். பொதுமக்கள் உதவியுடன் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு.

நாகை மாவட்டம், நாகூர் தாமு தம்பி மரைக்காயர் தெரு சேர்ந்தவர் முகம்மது இக்சான்னுள்ளா. இவர் நேற்று வழக்கம்போல் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி பூட்டி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த பொழுது தனது இருசக்கர வாகனம் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அருகில் இருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் தள்ளி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து முகமது இஸ்ஸான்நுல்லா கண்காணிப்பு சிசிடிவி காட்சிகளுடன் நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்ற சரித்திர பின்னணி கொண்ட நாகை வ.உ.சி தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. இவர் மீது தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனை எடுத்து இன்று அவரது வீட்டின் அருகில் பதுங்கி இருந்தவரை குற்றப்பிரிவு போலீசார் பிடித்து இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றினார். பிடிபட்ட கார்த்திகேயனை தங்களது இருசக்கர வாகனத்தில் போலீசார் நாகூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது வெளிப்பாளையம் காவல் நிலையம் எதிரே வந்த பொழுது திடீரென மயக்கம் வருவதாக கூறி கீழே சரிந்துள்ளார்.

உண்மையாக மயங்கி விட்டார் என நினைத்த போலீசார் மனிதாபிமானத்தோடு வாகனத்தை நிறுத்தியுள்ளனர். வாகனத்திலிருந்து இறங்கிய டூவீலர் திருடன் கார்த்திகேயன் தான் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என மீண்டும் வாகனத்தில் ஏற மறுத்து தரையில் படுத்து போலீசாருக்கு டஃப் கொடுக்க ஆரம்பித்தார். அவரை போலீசார் ஆட்டோவில் ஏற்ற முடியாமல் திணறினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் உடன் மல்லு கட்டிய கார்த்திகேயனை பொதுமக்கள் உதவியுடன் ஆட்டோவில் தூக்கி போட்டு அழைத்துச் சென்றனர். வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே நடந்த இச்சம்பவத்தை நூற்றுக்கணக்கானோர் அங்கு நின்று வேடிக்கை பார்த்த நிலையில் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் சக போலீசாருக்கு உதவி செய்ய வரவில்லை.

ஆட்டோவில் திருடனை ஏற்றிய பிறகு அங்கு வந்த வெளிப்பாளையம் போலீசார் கூட்டத்தை கலைக்க முயன்றது காண்போரை கவலை அடையச் செய்தது. அதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர். டூவீலர் திருடன் போலீசாரிடம் மல்லுக்கட்டிய சம்பவமும் காவல் நிலையம் அருகே நடந்த போதும் வெளிப்பாளையம் காவல்துறையினர் சக காவல்துறையினர் உதவிக்கு வராததும் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Leave a Reply
You must be logged in to post a comment.