மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து தெரியாது – இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி.

1 Min Read
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் ஒரு சிறுமி உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பின்னர், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.

- Advertisement -
Ad imageAd image

இதற்காக கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்திற்கு திமுக, ஆம்ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் மல்யுத்த வீராங்கனைகளுக்கும் , போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பல தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தும் போராட்டம் குறித்த கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி,”அவர்களுடைய யுத்தம் அவர்கள் சண்டையிடட்டும்; உண்மையாகவே அங்கு என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது.விளையாட்டு உலகில் தெரியாத ஒன்றைப் பற்றி பேசக்கூடாது என்பதை நான் கற்றுக்கொண்டேன்” எனக் கூறியுள்ள்ளார்.

Share This Article

Leave a Reply