குமரி மாவட்டம் திருவட்டார் அருகே அணக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகள் அபிஷா. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு முதலார் பகுதியை சேர்ந்த ஓவிய கலைஞரான பெர்லின் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட நாளில் இருந்தே இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது.தற்போது இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அபிஷா கடந்த பிப்ரவரி மாதம் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து தன் பெற்றோருடன் வசித்து வருகிறார் அபிஷா.

இந்த நிலையில் ஆற்றூர் பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வரும் அபிஷா தினமும் அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றுவருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரியிலிருந்து அபிஷா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அருவிக்கரை பாலம் அருகே திடீரென் அவரது கணவர் பெர்லின் அபிஷாவை வழிமறித்துள்ளார்.அபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிலவியது.வக்குவாதம் அதிகரிக்க அபிஷாவின் கணவர் பெர்லின் அபிஷாவை தாக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து அபிஷாவை தாக்கிவிட்டு திடீரென அவரது கையை பிடித்து தரதரவென இழுத்தபடியே காரை எடுத்து சென்றுள்ளார். இதையடுத்து அப்பகுதியிலிருந்த இளைஞர்கள் காரை துரத்தவே அபிஷாவை விட்டுள்ளார். அபிஷா தலையில் தலைகவசம் அணிந்திருந்தால் அபிஷா சிறுசிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.பெர்லின் காரை லேசாக ஓட்டியதால் அபிஷா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருக்கும்.

இதையடுத்து அப்பகுதியினர் அபிஷாவை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து திருவட்டார் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பலரிடம் விசாரணை மேற்கொண்டனர்.அது மட்டுமல்லாமல் அப்பகுதியில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆய்வு செய்ததில் அபிஷாவை அவரது கணவர் பெர்லின் காரில் தரதரவென இழுத்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது அதனை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர் .
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பெர்லினை தேடிவருகின்றனர். பட்டபகலில் மனைவியை காரில் தரதரவென கணவர் இழுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.