- தமிழக அரசை கண்டித்து தஞ்சையில் அதிமுக சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்டவர்கள் கைகளை கோர்த்தபடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.
மின்சாரக் கட்டணம், சொத்துவரி, வீட்டு வரி, குடிநீர் வரி பால்விலை என அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிப்படி மாணவர்களின் கல்வி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
மனித சமூகத்தைச் சீர்கெடுப்பதில் போதைப்பொருள் உபயோகம் முதலிடம் வகிக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழித்து குடும்பம், சமூகத்தை தவறான பாதையில் இழுத்துச் சென்று விடும்.
அநீதிகளும், கொடுமைகளும், அராஜகங்களும், வன்முறையும் நாட்டில் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. போதைப்பொருள் கடத்தல், விற்பனை, இன்று மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 30 கோடிக்கும் மேற்பட்டோர் போதைப் பொருள்களுக்கு அடிமையாக இருக்கின்றனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. போதைப்பொருள் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒருவர் பெண் என்பது வேதனைக்குரிய அதிர்ச்சித் தகவல். போதைக்கு அடிமையாவோரில் 85 விழுக்காடு படித்தவர்கள். அதில் 75 விழுக்காடு இளைஞர்கள் ஆவர்.
மது, சிகரெட் ஆகியவை முதலில் வழிகெடுத்து பிறகு அதையும் தாண்டி கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின், புகையிலை, ஒயிட்னர் போன்ற மனிதனை அழிக்கும் போதைப்பொருள்கள் இளைஞர்களின் வாழ்வைச் சீரழிக்கிறது. இவர்கள் மட்டுமின்றி இவர்களின் குடும்பங்கள், இவர்களால் பாதிப்புக்கு உள்ளாகும் அப்பாவிப் பெண்கள், குழந்தைகள் என்று பலருடைய வாழ்வும் சீரழிகின்றது. தனிமனித ஒழுக்கம் சீர்கெட்டு நாட்டின் முன்னேற்றப் பாதைக்கே போதை தடையாக இருக்கிறது. உலக வர்த்தகத்தில் பெட்ரோல், இராணுவத் தளவாடங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல் வியாபாரம் கொடிகெட்டிப் பறக்கிறது.
இதில் படித்த இளைஞர்கள், செல்வந்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கண்டும் காணாத அதிகாரிகளும் இருக்கின்றார்கள். இதனால் ஊழலும் இலஞ்சமும் பெருகுகிறது. போதைப்பொருள்களைக் கடத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் போதைப்பொருள் பயன்படுத்து வோரின் குடும்பமும் பாதிக்கப்படுவதோடு பொருளாதார நெருக்கடியால் பரிதாபமான நிலையில் தற்கொøலயும் நடந்து கொண்டிருக்கிறது.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/the-youth-who-was-searched-for-three-days-rescued-as-a-dead-body-near-the-drain/
போதைப்பொருள் பயன்படுத்துவோ ருக்கு எதிராகப் பல சட்டங்கள் இருந்தாலும் இவற்றையெல்லாம் யாரும் மதிப்பதாக இல்லை. பொது இடங்களில் புகைத்தல், மது அருந்துதல் தென்படும் போது அதற்கான சரியான நடவடிக்கையை உடனுக்குடனே அரசு கண்டிப்பாக எடுத்தல் அவசியம். தலைக்கவசம் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்பதை அறிவித்து அபராதம் விதிக்கும் காவல்துறையினரின் நடவடிக்கை போதைப் பொருள்களாலும் உயிருக்கும் சமூகத்திற்கும் ஆபத்து என்பதைக் கண்டித்தும், தண்டித்தும் அவர்கள் பொறுப்பைச் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். திரைப் படங்களில் போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் காட்சிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.
எனவே, போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் தமிழக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் தஞ்சை காந்திஜி சாலையில் மாவட்ட செயலாளர் சேகர், மாநகர செயலாளர் சரவணன் தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைகளை கோர்த்தபடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.