மிகுந்த எதிர்பார்புகளுக்கிடையில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் வெளியானது.
நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார், பீஸ்ட் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ஜெயிலர் படம், ரசிகர்களை திருப்திப்படுத்துமா என்ற கேள்வியையும் எதிர்பார்ப்பையும் படம் ஏற்படுத்தியுள்ளது.

ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், கடந்த 28ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நடிகர்கள் அனைவரையும் கவர்ந்தனர். குறிப்பாக ரஜினியின் பேச்சு இந்த நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக அமைந்தது. குட்டி ஸ்டோரியை சொல்லி, சர்ச்சைகளை ஏற்படுத்தினார் ரஜினி.
இன்னும் 9 நாட்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் குறித்து தற்போது படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர். நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். அவரது இசையில் அடுத்தடுத்து 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக தமன்னா, ரஜினி ஆட்டம் போட்டுள்ள காவாலா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில் இன்று படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதையொட்டி ஒரு மிரட்டலான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. போஸ்டரில் ரஜினிகாந்த், துப்பாக்கியுடன் யாரையோ சுடுவது போல காணப்படுகிறது. மேலும் போஸ்டரில் படம் இன்னும் 9 நாட்களில் ரிலீசாகவுள்ளது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கேப்ஷனில் சன் பிக்சர்ஸ் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply
You must be logged in to post a comment.