கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? ஐகோர்ட் கேள்வி.!

2 Min Read
கோவை ஈஷா யோகா மையம்
  • கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அளிக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர். எஸ் காமராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள ஆட்கொணர்வு வழக்கில்,தனது இரண்டு மகள்கள் கீதா மற்றும் லதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக் கொள்ள சென்றவர்கள்,அங்கேயே தங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக ஏற்கனவே ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தபோது, சென்னை உயர்நீதிமன்றம், கோவை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில்,இருவரும் சில நாட்கள் வெளி இடத்தில் தங்கி இருக்க வேண்டும் அதன்பின் மனநிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக சுட்டி காட்டியுள்ளார்.

தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று மகள்கள் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் இதன் காரணமாக தானும் தனது மனைவியும் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது மகள்களை தனி அறையில் அடைத்து துன்புறுத்தப்படுவதாக தெரிய வருவதாகவும் ஈஷா யோகா மையத்துக்கு எதிராக தான் எந்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும் , அப்படி செய்தால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என இரண்டவது மகள் மூலம் நிர்பந்திக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தனது மகள்கள் ஈஷா யோகா மையத்திலிருந்து வெளிவந்தால் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம் என்றும் அவர்களுக்கென தனி இடத்தை கொடுத்து அவர்களுடைய தனிமை பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே இரு மகள்களை மீட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எம்.சுப்ரமணியம், சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மகள்கள் இருவரும் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். பெற்றோர்கள் தங்களை கேவலப்படுத்துவதாக மகள்கள் தெரிவித்தபோது, அதற்கு நீதிபதிகள் குறுக்கிட்டு, நீங்கள் முற்றும் துணிந்த ஞானிகளான பின் அதை ஏன் பொருட்படுத்துகிறார்கள் என்று குறிப்பிட்டனர்.

ஈஷா யோகா மைய நிறுவனம் ஜக்கி வாசுதேவ் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்த புகைப்படத்தைப் பார்த்த நீதிபதிகள், மகளுக்கு திருமணம் செய்துவிட்டு இவர்களை சன்னியாசிகளை ஆக்குவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து தாங்கள் யாருக்கும் எதிராகவும் இல்லை ஆதரவாகவும் இல்லை என தெரிவித்த நீதிபதிகள்,இதுகுறித்து பல சந்தேகங்கள் உள்ளதாக குறிப்பிட்டனர். பின்னர் ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்ற விவரத்தை வரும் நான்காம் தேதி காவல்துறை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Share This Article

Leave a Reply