தஞ்சையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் மையத்தில் அணிவகுத்துச் சென்ற குதிரைகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை இயக்கி சென்றனர்.
தஞ்சையின் மிக முக்கிய பிரதான சாலையாக திகழ்ந்து வரும் காந்திஜி சாலையில். வங்கிகள், மாநகராட்சி அலுவலகம், துணிக்கடைகள், மருத்துவ மனை உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் உள்ளன.
இந்த சாலையில் நாள் தோறும் இருசக்கர வாகனம், கனரக வாகனம், பேருந்துகள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையில் குதிரைகள் சாலையின் மையத்தில் வரிசையாக அணிவகுத்து சென்றன. மாடுகள். குதிரைகள் நகரில் வலம் வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

நகரில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க நடமாடும் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் செயல்படாமல் உள்ளது. ஆக்ரமிப்பு அகற்றுவதில் காட்டும் ஆர்வத்தை நகர வீதிகளில் வலம் கால்நடைகளை பிடிப்பதிலும் ஆணையர் ஆர்வம் காட்ட வேண்டும் என தஞ்சை மக்கள் விரும்புகின்றனர்.
தொடர்ந்து இதுபோன்ற மாடுகள் மற்றும் குதிரைகள் சாலைகளில் செல்வதால் போக்குவரத்து நெரிசில் ஏற்படுவது உடன் மக்கள் அச்சுத்துடன் இயங்க வேண்டி உள்ளது இவற்றை ஒழுங்கு படுத்துவதன் மூலம் காலை பாதுகாப்பை உறுதி செய்யலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.