காதலியை திருமணம் செய்து தர மறுத்ததால் தாய்க்கு கத்திக்குத்து திருவள்ளூரில் பயங்கரம் .!

2 Min Read
கைது செய்யப்பட்ட குற்றவாளி பரத்

பெரியபாளையம் அருகே காதலித்த பெண்ணை அவரது தாய் திருமணம் செய்து தர மறுத்ததால் தனியாக இருந்த காதலியின் தாயை சரமாரியாக கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது . பாதிக்கப்பட்ட பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

- Advertisement -
Ad imageAd image

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கோசவன்பேட்டை காமாட்சி நகரை சேர்ந்தவர் சிவபாலசாமி நெசவு தொழிலாளி , இவருக்கு சந்திரகுமாரி (38) என்ற மனைவியும் 19 வயது நிரம்பிய ஒரு மகளும் உள்ளனர். தம்பதியினரின் மகள் சென்னை தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார் .

இந்நிலையில் இன்று காலை சிவபாலசாமி குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற போது, இளைஞர் ஒருவர் வீட்டிற்கு வந்து அக்கம்பக்கத்தில் அவர்களது வீடு என் பூட்டியுள்ளது என்று விசாரித்துள்ளார். நீ யார் என்று விசாரித்தபோது அந்த இளைஞர் ,தானும் சிவபாலசாமி மகளும் காதலிப்பதாக கூறியுள்ளார்.

இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞரை பிறகு வந்து பேசிக் கொள்ளுமாறு அங்கிருந்து அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர். சிறிது நேரம் கழித்து சிவபாலசாமி வீட்டில் இருந்து அவரது மனைவி சந்திரகுமாரியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது . இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி சென்றபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சந்திரகுமாரி கிடந்துள்ளார். ஜன்னல் வழியே அவர்கள் எட்டிப் பார்த்தபோது இளைஞரும் வீட்டிற்குள் இருந்துள்ளார்.

இதனையடுத்து அந்த இளைஞரை வெளியில் தப்பி செல்லவிடாமல் தடுத்து நிறுத்திய அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் உடனடியாக பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் .

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்திரகுமாரியை அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மீட்டு பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த பரத் என்பதும் சந்திரகுமாரியின் மகள் படித்த கல்லூரியில் அவரும் படித்ததாகவும் அவரது மகளை காதலித்ததாக தாயிடம் கூறிய போது அதற்கு ஒப்புக்கொள்ளாததால் ஆத்திரத்தில் கத்தியால் சந்திரகுமாரியை குத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார் .

அந்த இளைஞரை கைது செய்து பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிலிருந்த தனியாக இருந்த பெண்மணியை கத்தியால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Share This Article

Leave a Reply