- திருவையாறில் மிக பழைய வாய்ந்த திருக்கோவில்கலுக்கு ஹோமம் வளர்க்கப்பட்டு, பாலாலயம் செய்து திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான மிக பழமை வாய்ந்த கொலை ஆயிரம் கொண்டாள் அம்மன், அடைக்கலம் காத்த அம்மன், சப்த கன்னிகள், விநாயகர், நந்திகேஸ்வரர் ஆகிய திருக்கோவில்களை திருப்பணி செய்வதற்காக திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோவில் ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் ஹோமங்கள் மஹா பூர்ணாதி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், வரைபடத்திற்கு கலசபிஷேகம் செய்து பாலாலயம் செய்யப்பட்டன.
திருக்கோவிலில் கும்பாபிஷேகமானது விரைவில் திருப்பணிகள் முடிக்க பெற்று கும்பாபிஷேகம் நடைபெறும் என தருமபுர ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் உத்தரவின் பேரில் பாலாலயம் ஏற்பாடுகளை திருக்கோவிலின் எழுத்தர்கள் அஹோரமூர்த்தி மற்றும் ஆனந்த் ஆகியோர் வெகு சிறப்பாக செய்திருந்தார்கள்.
குடமுழுக்கு அல்லது கும்பாபிசேகம் (கும்பாபிஷேகம்) ஒவ்வொரு இந்து கோவிலிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஒரு சடங்காகும். இதன்மூலம் உள்ளிருக்கும் கடவுள் சிலைகளுக்கு தெய்வீகத்தன்மை புதுப்பிக்கப்படுகிறது.குடத்தில் நீர் நிரப்பி புனித ஆறுகளின் நீராக உருவகித்து மந்திரங்களினால் தெய்வத்தன்மை ஏற்றப்பட்ட நீரினால் சிலைகளும் கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கலசங்களும் நீராட்டப்படுவதால் இது குடமுழுக்கு என்று அழைக்கப்படுகிறது. கோபுர கலசங்களும் தெய்வத்தன்மை பெறுவதால் ஒருவர் கோவிலுக்குள் செல்லாமலே கோபுர தரிசனம் மூலமே கடவுளின் அருளைப் பெற இயலும் என்பது இறையாளர்களின் நம்பிக்கை.
ஏக குண்டம் – ஒரு குண்டம அமைத்தல். பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல். நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல். உத்தம பக்ஷம் – 33.குண்டம் அமைத்தல்.
கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தன தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அது 2.காலம், 4.காலம், 8.காலம், 12.காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.