மிக அதிகமாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் எனவும் இது பா.ஜ.க எம்.எல்.ஏ இருக்கும் தொகுதி மற்ற தொகுதிகளை விட இந்த தொகுதியில் இருந்து அண்ணாமலைக்கு அதிகமான வாக்குகளை கொடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் பேச்சு.
கோவையின் வெற்றி மக்களின் வெற்றியாக மாற வேண்டும் என அண்ணாமலை பேச்சு. கோவையில் புலியகுளம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் தெற்கு தொகுதி சட்டமன்றத்திற்கான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூட்டத்தின் தலைமை தாங்கினார்.

கோவை பாராளுமன்ற வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கலந்து கொண்டு தேர்தலில் பணியாற்றுவது குறித்தான அறிவுறுத்தலை வழங்கினர். முன்னதாக பாஜகவினர் ஆப்பிள் பழத்திலான மாலையை வானதி சீனிவாசனுக்கு அணிவித்தனர்.
அதன் எடை தாங்க முடியாமல் பின்னர் அந்த மாலையை அண்ணாமலைக்கு அணிவித்தனர். தொடர்ந்து அண்ணாமலையை சூழ்ந்து கொண்டு செல்ஃபி புகைப்படங்கள் எடுப்பதற்கு தொண்டர்கள் முந்தி எடுத்துக் கொண்டனர்.

வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூட்டத்தில் பங்கு பெற்றதை அடுத்து ஹோலி பண்டிகையை கொண்டாடும் விதமாக அண்ணாமலைக்கும் வானதி சீனிவாசனுக்கும் வண்ணம் பூசி மகிழ்தனர். பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேசியதாவது;-
இந்தியா முழுமையும் அண்ணாமலை வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். கோவைக்கு தனியாக வரலாறு இருக்கின்றது. அதில் பா.ஜ.க-விற்கு ஒரு அடையாளம் இருக்கின்றது.

மத தீவிரவாததிற்கு உயிர் பலி கொடுத்த ஊர் இது . இந்த தொகுதிக்கு மாநில தலைவர் போட்டியிடும் நிலையில் இது சாதாரண வெற்றியாக இருக்க கூடாது. அடுத்து ஆட்சி அமைக்க அடித்தளமாக இருக்க வேண்டும்.
ஏற்கனவே ஒரு வரலாற்றை பெற்று இருக்கும் தொகுதி, புதிய வரலாற்றை படைக்க இருக்கின்றது. கலவையான மக்கள் இருக்கும் தொகுதி. 10 ஆண்டுகளாக பிரதமரின் ஓவ்வொரு திட்டங்களும் மக்களை சென்றடைய வேண்டும்.

பா.ஜ.க-வின் முக்கியமான தலைவர் இங்கு வெற்றி பெற்றால், வளர்ச்சி என்பது பல மடங்காக இருக்கும். இது தமிழகத்தின் முக்கிய அரசியல் வெற்றியாக இருக்கும். பா.ஜ.க-வின் வருங்கால வளர்ச்சி இந்த தொகுதியில் முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் பிரமாண்ட மாற்றத்தை தரும் வெற்றியாக இருக்கும். தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்கான வெற்றியாகவும் இருக்கும். பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவர்கள் நமது தலைவர் மீது எப்படி அவதூறு வீசுகின்றனர், கீழ்தரமாக பேசுகின்றனர்.

இதற்கு பதிலடியாக வாக்குகளை பா.ஜ.க-விற்கு செலுத்த வேண்டும். மிக அதிகமாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். மற்ற தொகுதிகளை விட இந்த தொகுதியில் இருந்து அண்ணாமலைக்கு அதிகமான வாக்குகளை கொடுக்க வேண்டும்.
இதை உறுதி செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் பேசினார். அண்ணாமலை பேசியதாவது;- கோவை தெற்கு தொகுதியில் தனி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். மிகவும் முக்கியமான தேர்தல் மீண்டும் 3-வது முறையாக பிரதமர் மோடி வருவார் என தெரிந்த தேர்தல் தான் இது.

ஜூன் 4ம் தேதி அரசியல் புரட்சி ஏற்பட உழைத்து வருகிறோம். கோவை என்றாலே நாகரீகமான கலாசாரம். அதிக அளவில் கல்லூரிகள் உள்ள பெருமை கோவைக்கு உள்ளது. வளர்ச்சியை தடுப்பதற்காக 10 ஆண்டுகள் பின்னோக்கி எடுத்து சென்றனர்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை தொகை நிறுத்தி விடுவதாக சொல்லுகிறார்கள் .30% பெண்களுக்கு மட்டுமே உரிமை தொகை வருகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு பின் அதையும் நிறுத்தி விடுவார்களாம்.

பாஜக கொடுக்கும் பணம் என்று கூறினால் நாங்கள் 1500 ரூபாயாக உயர்த்தி கொடுக்கிறோம். இன்னொரு கட்சி 3 ஆயிரம் கொடுப்போம் என கிளம்பி வருகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் விட 10 மடங்கு மக்கள் அறிவாளிகள். அதும் கோவை மக்கள் அறிவு நிறைந்தவர்கள்..
மேலும் 33 மாதமாகி சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்னாச்சு? காதில் பூ சுற்றி காதில் சங்கு வைத்து ஊதினாலும் கேட்காதது போன்று இருப்பார்கள். மக்களை முட்டாளாக மாற்றவே நினைக்கிறார்கள்.

மோடி நாட்டுக்காக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறார். மக்களுக்குகாக சுயநலம் இல்லாத அளவிற்கு ஒரு பிரதமரை நாடு பார்த்து வருகிறது. நல்ல கணக்கு வாத்தியரை போன்று மோடியை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
உங்கள் கையில் பவர்புள்ளான செல்போன் என்கிற ஆயுதம் உள்ளது. உங்கள் அலைபேசியில் உள்ள எண்களுக்கு 3 முறை பேசி வாக்கு கேட்க வேண்டும். டிவி சீரியல், பேப்பர் படிக்கும் நேரம், பேருந்தில் போகும் நேரம் போன்ற காலங்களில் பேசுங்கள்.

தாமரைக்கு வாக்கு செலுத்த சொல்லுங்கள். எந்த கட்சியாக இருந்தாலும் சரி. பேசமால் இருந்து விடாதீர்கள் . பக்கத்து வீடுகளுக்கு சென்று 10 நிமிடங்கள் பேசுங்கள். அக்கா, அண்ணே, தம்பி என்று பேசுங்கள்.
பெண்களுக்கு சிலிண்டர் மானியம் கொடுக்கிறோம். பட்ஜெட்டிற்கு கொடுக்கும் பணத்தை மட்டும் போலி பிரச்சாரம் செய்கிறது திமுக.
Leave a Reply
You must be logged in to post a comment.